பாராளுமன்ற மக்களவையில் ஆங்கிலோ–இந்திய பிரதிநிதிகள் போதிய அளவில் இல்லை என ஜனாதிபதி கருதினால், அதிகபட்சமாக அந்த சமூகத்தைச் சேர்ந்த இருவரை மக்களவை உறுப்பினர்களாக அவர் நியமிக்க முடியும். இந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த சமூக சேவகியான ஆங்கிலோ–இந்திய பெண் டயான
Sunday, August 31, 2014
‘மம்தா பானர்ஜியுடன் பேச்சு நடத்தும் கேள்விக்கே இடம் இல்லை’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு திட்டவட்ட அறிவிப்பு
மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கேள்விக்கே இடம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. மம்தா பானர்ஜி கருத்து பீகார் அரசியலில் இரு துருவங்களாக இருந்த ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்தும், ஐக்கிய ஜனதாதள தலைவர்
நீதித்துறையில் ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டம் சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேச்சு
நீதித்துறையில் ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். பட்டமளிப்பு விழா பெங்களூரில் உள்ள இந்திய தேசிய பல்கலைக்கழக சட்டப்பள்ளியின் 22–வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள். அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு தற்போது மத்திய அரசில் 30 லட்சம் ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் தவிர 50 லட்சம் ஓய்வூதிய
கர்நாடக கவர்னரை நியமிப்பது குறித்து என்னிடம் கலந்து பேசவில்லை மத்திய அரசு மீது முதல்–மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடக மாநிலத்தின் புதிய கவர்னரை நியமிப்பது குறித்து என்னிடம் கலந்து பேசவில்லை என்று மத்திய அரசு மீது சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார். புதிய கவர்னர் நியமனம் கர்நாடக கவர்னராக இருந்த பரத்வாஜின் பதவிக்காலம் முடிந்ததும், உடனடியாக புதிய கவர்னரை மத்திய அ
ஆசிரியர் தினத்தன்று பிரதமர் மோடி, மாணவ–மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது
ஆசிரியர் தினத்தன்று பிரதமர் மோடியுடன் ஆயிரம் மாணவ–மாணவிகள் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுடன் மோடி கலந்துரையாடல் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்–மந்திரியாக இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5–ந் தேதி ஆசிரியர் தினத்தை ச
அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு படப்பிடிப்பு ரத்து
பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன், ‘பிகு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், நடிகை தீபிகா படுகோனே, நடிகர் இர்பான் கான் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்நிலையில், நேற்று படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது நடிகர் அமிதாப்பச்சனுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்ப
‘எல்லையில் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்’ பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை
எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டு உள்ளது. பாக்.ராணுவம் தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால
மத்திய மந்திரி ஆன பிறகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஜிதேந்திரசிங்
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் டாக்டர் ஜிதேந்திரசிங். ஜம்முவில் மருத்துவமனை நடத்தும் இவர் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாகி, மத்திய மந்திரி சபையிலும் இடம் பெற்றார். அறிவியல், தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம் ஆகிய துறைகளை கவனிக்கும் ராஜாங்க
மத மோதல்களுக்கு காரணம் யார்? பா.ஜனதா எம்.பி. கருத்தால் சர்ச்சை
மத மோதல்களுக்கு காரணம் யார் என்பது குறித்து பாரதீய ஜனதா எம்.பி. ஆதித்யநாத் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா எம்.பி. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாரதீய ஜனதா எம்.பி., ஆதித்யநாத். அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தொகுதி இடைத்தேர
‘கிராமங்களுக்கு சென்று பணியாற்றுங்கள்’ டாக்டர்களுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்
இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் பலருக்கு மருத்துவ வசதி என்பது இன்னும் தூரத்து கனவாகவே இருப்பதாகவும், எனவே டாக்டர்கள், குறிப்பாக சிறப்பு மருத்துவ படிப்பு படித்தவர்கள் கிராமங்களுக்கும், மலைப்பகுதியில் உள்ள சிறிய ஊர்களுக்கும் சென்று
மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் பிரபலப்படுத்த குழு பா.ஜனதா அமைத்தது
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் ஏழை மக்கள் ஒவ்வொருவரையும் சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்கவும், இந்த திட்டங்கள் குறித்து மக்களிடையே பிரபலப்படுத்தவும் மத்திய மந்திரிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் கொண்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்றை பா.ஜனதா அம
உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேபாளம் செல்கிறார்
‘சார்க்’ நாடுகளின் 17–வது உச்சி மாநாடு மாலத்தீவில் நடைபெற உள்ளது. முன்னதாக தீவிரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஒழிப்பு தொடர்பாக ‘சார்க்’ நாடுகளின் உள்துறை மந்திரிகள் மாநாடு வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் நேபாளத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக
ரூ.8½ லட்சம் சிவப்பு சந்தன மரங்கள் காருடன் பறிமுதல் பெங்களூரை சேர்ந்த 2 பேர் கைது
ஆந்திர மாநிலம் பாகாலா போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சித்தூரை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் வந்த சந்தனமர கடத்தல்காரர் பாலாஜி என்பவர் தப்பி ஓடி விட்டார். காரில் 4 சிவப்பு சந்தனமர கட்டைகள் இருந்த
பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத வேற்றுமையை பரப்புகிறது - மாயாவதி
லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மாநாட்டில் பேசிய மாயாவதி, மக்களுக்கு எதிரான, முதலாளித்துவ மற்றும் வகுப்புவாத பாரதீய ஜனதா எப்போது ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் மதச்சார்பற்ற நல்லிணக்கத்திற்கு ஒரு பெரிய அளவில் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. நீங்கள் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் விழிப்புடண் இருக்க வேண்டும். அவர்கள் வகுப்புவாதத்தை ஊக்குவிக்கின்றனர். நாட்டில் நல்லிணக்கத்திற்கு பிரச்சனை ஏற்படுத்துகின்றனர். என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை ரத்து; மோடி அரசு மீது உமர் அப்துல்லா கடும் தாக்கு
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும், இதனை மீறி இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் வருகிற 25–ந்தேதி இஸ்லாமாபாத் நகரில் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா திடீரென ரத்து செய்தது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 107 சதவிகிதமாக உயர்த்த அரசு திட்டம்
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு இதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது 100 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி 107 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் ஓய்வூதியக்காரர்களும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013 ஜூலை 1ம் தேதி முதல் 2014 ஜூன் 30ம் தேதி வரையில் தொழில்துறை சில்லறை விலை பணவீக்கம் 7.25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
Saturday, August 30, 2014
பஸ் மீது டிராக்டர் மோதி விபத்து 10 பக்தர்கள் பலி
ராஜஸ்தான் மாநிலம் போக்ரான் அருகே உள்ள பாபா ராம்தேவ் சன்னதிக்கு, உதைபூரை சேர்ந்த பக்தர்கள் பஸ்சில் வந்துள்ளனர். அவர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு, தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்களது பஸ், பாலி- உதைபூர் சாலையில் காலை 6 மணிக்கு மணிடா கிராமத்தை கடந்தது. அப்போது எதிரே வந்த டிராக்டர் பஸ் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் 6 பக்தர்கள் சம்பவ இடத்திலே பலியாகினர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும், வழியிலே காயம் அடைந்த 4 பேர் பலியாகினர். மேலும், காயம் அடைந்த 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடத்ததை அடுத்து டிராக்டர் ஓட்டி வந்தவரை காணவில்லை.
டியூசன் ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ததால் 13 வயது மாணவி தற்கொலை முயற்சி
கிழக்கு டெல்லியின் மந்தவெளி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு சென்று டியூசன் சொல்லி கொடுத்து வந்துள்ளார். டியூசன் ஆசிரியர், வீட்டில் மாணவியில் பெற்றோர்கள் இல்லாத நேரம் தனது வீட்டிற்கு அழைத்து, அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதை அவன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். மற்றும் சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதனால் மாணவி மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். அப்போது இது குறித்து வெளியே கூறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடம் என்று மாணவியை மிரட்டியுள்ளான். இதனால் மாணவி மிகவும் அச்சத்துடன் இருந்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் கேரள கவர்னராக நியமனம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஷீலா தீட்சித் ராஜினாமா மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நியமி
பா.ஜனதாவில் சேர்ந்தால் டெல்லி முதல்–மந்திரி பதவி தருவதாக பேரம் பேசினார்கள் ஆம் ஆத்மி தலைவரின் குற்றச்சாட்டால் பரபரப்பு
பா.ஜனதாவில் சேர்ந்தால் டெல்லி மாநில முதல்–மந்திரி பதவி தருவதாக என்னிடம் பா.ஜனதா எம்.பி. ஒருவர் பேரம் பேசினார் என்ற ஆம் ஆத்மி தலைவரின் குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சட்டசபை முடக்கம் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த டெல்லி மாநில சட்டசபை தேர்தலில்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.92 குறைந்தது டீசல் விலை 50 காசுகள் உயர்ந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.92 குறைந்தது. டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை நிர்ணயம் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் கச
தீவிரவாதிகள் தாக்குதல் காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர் சுட்டுக்கொலை
காஷ்மீர் எல்லையில், தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிர் இழந்தார். தீவிரவாதிகள் தாக்குதல் காஷ்மீரில், எல்லைக்கு ஆப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து தீவி
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ‘திடீர்’ வாபஸ்
சத்தீஸ்கர் மாநிலம் அந்தாகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 13–ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட வேட்பாளர் மந்துரம் பவார், கடைசி நேரத்தில் திடீரென்று வாபஸ் பெற்றுவிட்டார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்
பிரதமரிடம் மட்டுமே குவிக்கப்படவில்லை அனைத்து மந்திரிகளுக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது மத்திய மந்திரி அருண் ஜெட்லி பேட்டி
பிரதமரிடம் மட்டுமே அதிகாரம் குவிக்கப்படாமல், அனைத்து மந்திரிகளுக்கும் பரவலாக்கப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறினார். மத்திய அரசின் 100 நாட்கள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்று 100 நாட்கள் ஆனதை தொடர்ந்து மத்திய நிதி மற்றும் ராணுவ
மும்பை ஆஸ்பத்திரியில் லாலுபிரசாத்துடன் நிதிஷ்குமார் சந்திப்பு உடல் நலம் விசாரித்தார்
பீகார் முன்னாள் முதல்–மந்திரியும் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கடந்த புதன் கிழமை அன்று லாலு பிரசாத்திற்கு இருதய வால்வு அறுவை சிகிச்ச
அவதூறு வழக்கில் ஆஜராக தவறிய ஷீலா தீட்சித்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் டெல்லி கோர்ட்டு அதிரடி
அவதூறு வழக்கில் ஆஜராக தவறிய டெல்லி முன்னாள் முதல்–மந்திரி ஷீலா தீட்சித்துக்கு, அதிரடியாக ரூ.3 லட்சம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அவதூறு வழக்கு டெல்லியில் ஷீலா தீட்சித் முதல்–மந்திரி பதவி வகித்தபோது, 2012–ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற
கிரிமினல் வழக்குகளில் சிக்கிய மந்திரிகள் எத்தனைபேர்? தொண்டு நிறுவனங்களின் ஆய்வறிக்கையில் தகவல்
மத்திய மந்திரிகளில் 12 பேரும், மாநில மந்திரிகளில் 44 பேரும் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தொண்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. கிரிமினல் வழக்குகள் ஆய்வு கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அம
Friday, August 29, 2014
சதானந்த கவுடா மகன் மீது நடிகை கற்பழிப்பு புகார்: ‘கார்த்திக் கவுடா மீதான குற்றம் நிரூபணமானால் கைது செய்வோம்’ பெங்களூர் போலீஸ் கமிஷனர் தகவல்
சதானந்த கவுடா மகன் மீது நடிகை மைத்திரி கூறிய புகாரின் அடிப்படையில், அவர் குற்றம் செய்தது நிரூபணமானால் கைது செய்வோம் என்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். நடிகை புகார் மத்திய ரெயில்வே மந்திரி சதானந்தா கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா தன்னை காதலித்
பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த தயக்கம் இல்லை நரேந்திர மோடி பேட்டி
பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த தயக்கம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார். பேச்சுவார்த்தை ரத்து 5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) ஜப்பான் செல்கிறார். இதையொட்டி நேற்று அவர் டெல்லியில் ஜப்பான் நிருபர்களுக்கு பேட்டி அள
விநாயகர் கோவிலுக்குள் துப்பாக்கியுடன் சென்ற நடிகர் சரண்ராஜ் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்தார்
சாமி கும்பிடுவதற்காக, விநாயகர் கோவிலுக்குள் கைத்துப்பாக்கியுடன் சென்ற நடிகர் சரண்ராஜ், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். துப்பாக்கியுடன் சரண்ராஜ் ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து இருப்பவர் நடிகர் சரண்ராஜ். விநாயகர்
இந்தியா–பாக். பேச்சுவார்த்தை: ‘காஷ்மீர் சட்டசபை தீர்மானம் தேவை இல்லாதது’ வெங்கையா நாயுடு கருத்து
காஷ்மீர் மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்தியா–பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, காஷ்மீர் மாநில சட்டமன்றக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. இதுபற்றி ஐதராபாத் வந்த மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந
பெண் நீதிபதியின் செக்ஸ் புகார்: மத்திய பிரதேச ஐகோர்ட்டு நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு விசாரணை குழுவுக்கும் இடைக்கால தடை
பெண் நீதிபதியின் செக்ஸ் புகார் குறித்து பதில் அளிப்பதற்காக, மத்திய பிரதேச ஐகோர்ட்டு நீதிபதிக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த விசாரணை குழுவின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தது. செக்ஸ் புகார்
70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தீவிர அரசியலில் இருந்து விலக வேண்டுமா? ஜனார்த்தன் திவிவேதி கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தீவிர அரசியலில் இருந்து விலக வேண்டும் என்ற ஜனார்த்தன் திவிவேதியின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதியவர்கள் விலக வேண்டும் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிமன்ற குழுவில் இருந்து வாஜ்பாய், எல்.கே.அத்வானி, முரளிமனோ
‘ஆபாச இணையதளங்களை தடை செய்யாதது ஏன்?’ மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
ஆபாச இணையதளங்களை தடை செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பி, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்த வக்கீல் கம்லேஷ் வஸ்வானி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். அந்த
விசாரணை கைதிகள் தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு’ ‘மாநிலங்களுடன் 6 வாரங்களில் ஆலோசித்து முடிவு எடுங்கள்’
விசாரணை கைதிகள் தொடர்பாக மாநிலங்களுடன் 6 வாரங்களில் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்தது. பொது நல வழக்கு மனித உரிமைகளுக்கான போராடும் அமைப்பின் சார்பில், ஜிதேந்திர ஜெயின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொ
டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழக–இலங்கை மீனவர்கள் கூட்டாக மீன் பிடிப்பது பற்றி ஆலோசனை
தமிழக–இலங்கை மீனவர்கள் கூட்டாக மீன் பிடிப்பது குறித்து டெல்லியில் நடந்த இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. முதல் கூட்டம் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப
ரூ.20 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல் மத்திய அரசு ஒப்புதல்
ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாட கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. மோடி அறிவிப்பு ராணுவ மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. ராணுவ தளவாடங்களின் இறக்குமதியை குறைத்த
2 நாள் சுற்றுப்பயணம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காஷ்மீர் செல்கிறார்
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ‘ஜம்மு பல்கலைக் கழகத்தின்’ 14–வது பட்டமளிப்பு விழா வருகிற செப்டம்பர் 1–ந் தேதி நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக காஷ்மீர் மாநிலத்துக்கு 1–ந் தேதி செல்கிறார். மேலும், அவர் செப்டம்பர் 2–ந
நிலக்கரி சுரங்க முறைகேடு குமாரமங்கலம் பிர்லா மீதான வழக்கு கைவிடப்படுமா? டெல்லி கோர்ட்டு 1–ந் தேதி முடிவு
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், நிலக்கரித்துறை மந்திரி பொறுப்பையும் வகித்த காலத்தில் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை பல்வேறு தரப்பினருக்கு ஒதுக்கியதில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை அம்பலப்படுத
ஒரு தூண் பூமிக்குள் திடீரென புதைந்ததால் காளஹஸ்தி கோவில் மண்டபம் சரிந்தது பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
காளஹஸ்தி கோவில் மண்டபத்தில் இருந்த ஒரு தூண் திடீரென பூமிக்குள் புதைந்ததால் மண்டபம் சரிந்தது. இதனால் அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காளஹஸ்தி கோவில் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் உள்ளது. இது கிருஷ்ணதேவராயரால்
குவைத்தில் 25 இந்திய தொழிலாளர்கள் கைது
அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் ஏராளமான இந்திய தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அங்குள்ள இந்திய தொழிலாளர்கள் சிலருக்கும், எகிப்தியர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் எகிப்தியர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக குவைத் போலீசார் 25 இ
மத்திய மந்திரி நஜ்மா ஹெப்துல்லா கருத்தால் சர்ச்சை
மத்திய மந்திரி நஜ்மா ஹெப்துல்லா கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சர்ச்சை கருத்து பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசில் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரியாக இருப்பவர் நஜ்மா ஹெப்துல்லா. இவர், ‘‘எல்லா இந்தியர்களும் இந்துக்கள்த
குவைத்தில் இந்தியர்களுக்கு உதவி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - வெளியுறவு அமைச்சகம்
குவைத்தில் இந்திய தொழிலாளர்களுக்கும். எகிப்து தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 எகிப்தியர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 25 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் காயம் அடைந்த இந்தியர்கள் 15 பேர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலை அடுத்து இந்திய தொழிலாளர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி உள்துறை எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்து வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவலை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து வருகின்றனர். தீரவாதிகள் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் அருகேயே முகாம் அமைத்து தங்கியுள்ளனர். இதனையடுத்து எல்லையில் இந்திய ராணுவத்தினர் விழிப்புடன் உள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர். என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் எல்லையில் 15 சந்தேகத்திற்கு இடமான பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர் என்று எச்சரித்து எல்லையோர மாவட்டங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே தீவிரவாதி ஹபீஸ் சையத் எல்லையில் நடமாடுவதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஆபாச இணையதளத்தை பிளாக் செய்தால், மற்றொன்று தொடங்குகிறது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்பான ஆபாச இணையதளங்களை முடக்க கோரி கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது பதில் அளித்துள்ள மத்திய அரசு, இது போன்ற ஆபாச இணையதளங்களின் சர்வர்கள் வெளிநாடுகளில் உள்ளது. இதனால் கட்டுப்படுத்துவதில் சில பிரச்சனைகள் உள்ளது. இத்தகைய பிரச்சனைகளை தீர்க்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. என்று கூறியுள்ளது. இதனையடுத்து, பிரச்சனை தொடர்பாக் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் அறிக்கையை 6 வார காலங்களில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாள் இன்று நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விநாயகர் சதுர்த்தி நன்நாளில் நாம் விநாயகப் பெருமானை வணங்குகிறோம். விநாயகப் பெருமான் அருள் அனைவருக்கு கிடைத்து, அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, ஞானம் எல்லாம் பெற்று வாழ்கையில் வளம் பெற வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐகோர்ட்டு விசாரணை குழுவுக்கு தடை; பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்சு நீதிபதியாக பதவி வகித்த பெண் ஒருவர், அந்த மாநில ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி ஒருவர் மீது செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தன்னை அந்த நீதிபதி வீட்டுக்கு தனிமையில் வந்து, குத்து பாடலுக்கு நடனம் ஆடச் சொல்லி பாலியல் தொல்லை தந்ததாக குற்றம் சாட்டினார். தான் அப்படி நடந்து கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் தன்னை கொள்ளையர்களின் ராஜ்யம் என்று சொல்லப்படக்கூடிய ‘சிதி’ என்ற இடத்துக்கு இடமாற்றம் செய்ததாகவும் கூறினார். இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
மனநலம் பாதிக்கப்பட்டவரை கொலை செய்து தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆடியவர் கைது
டெல்லியில் கடந்த மே மாதம் சந்திரா மோகன் சர்மா கொலை செய்யப்பட்டார். ஆனால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சந்திரா மோகன் சர்மா கடந்த மே மாதம் 1ம் தேதி அப்பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒருவரை கொலை செய்துள்ளார். பின்னர் தன்னுடைய காரில் முன் இருக்கையில் வைத்துள்ளார். பின்னர் தன்னுடைய உடல் என எல்லோருக்கும் அடையாளம் தெரிய சில வேலைகளை செய்துவிட்டு காருக்கு தீ வைத்துள்ளார். பின்னர் பெங்களூர் சென்று மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்துள்ளார். என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, August 28, 2014
குவைத்தில் கொலை தொடர்பாக 25 இந்திய பணியாளர்கள் கைது; மீட்க மோடி அரசுக்கு கோரிக்கை
குவைத்தில் 2 எகிப்தியர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 25 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக குவைத்தில் உள்ள இந்திய பணியாளர்கள் இந்திய அரசுக்கு எஸ்.ஒ.எஸ். குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அவர்கள் வேலை செய்துவந்த மின் ஒப்பந்தம் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் போலீசால் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக எங்களை மீட்கும்படி பிரதமர் மோடி மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதலுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லியில் அரசு அமைப்பு; மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எந்த அறிக்கையும் அனுப்பவில்லை - நஜீப் ஜங்
டெல்லியில் அரசு அமைப்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் நஜீப் ஜங் அனுப்பினார் என்பது தொடர்பான மீடியா தகவல்களை அவர் மறுத்துள்ளார். இது தொர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் இதுவரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் யாருக்கும் எந்த ஒரு அறிக்கையும் அளிக்கவில்லை. என்று கூறினார். டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு எப்பொதும் இருக்கிறது. என்று அவர் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நிர்வாக பொறுப்புகளை அம்மாநில கவர்னர் நஜீப் ஜங் கவனித்து வருகிறார்.
சகோதரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை ‘மைனர்’ பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது
பெங்களூர் பன்னரகட்டா ரோடு பிஸ்மில்லா நகரை சேர்ந்தவர் யூசுப். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 4 மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். அவர்களில் 3 மகள்களுக்கு திருமணம் ஆகி, கணவர்களுடன் வசித்து வருகிறார்கள். மிகவும் வறுமையில் வாடிய யூசுப் தனது கடைசி மகளான ஆயிஷாவை(வயது 14, பெயர் மாற்றப்பட்டுள்ளது) நியூ குரப்பனபாளையா பகுதியை சேர்ந்த முசாமில்(24) என்பவருக்கு 2–வதாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதனால் ஆயிஷாவின் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய யூசுப், அவளுக்கு அவசர அவரசமாக திருமணம் பேசி முடித்தார்.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரை நியமிக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு
கடந்த மே மாதம் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 182 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 44 இடங்களே கிடைத்தன. பாராளுமன்றத்தில் காங்கிரஸ், 2–வது பெரிய கட்சியாக விளங்கிய போதிலும், அந்த கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவியை தங்களுக்கு வழங்க கோரி காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மேகாலயாவில் பஸ் பள்ளத்திற்குள் விழுந்ததில் 4 பேர் பலி, 32 பேர் படுகாயம்
மேகலாயாவின் துரா பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் ஒன்று ஷில்லாங் நோக்கி சென்றது. பஸ் துராவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் செல்லும் போது நிலைதடுமாறி விபத்துக்குள் சிக்கியது. பஸ் மலையில் இருந்து பள்ளத்திற்குள் விழுந்தது. இந்த விபத்து இரவு 12:30 மணி அளவில் நடைபெற்றுள்ளது. உடனடியாக தகவல் அறிந்த மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும், 32 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் துரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் கவுகாத்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ரூ.1 லட்சம் காப்பீடு வசதி கிடைக்கும் 7½ கோடி பேருக்கு வங்கி கணக்கு திட்டம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் ஒரே நாளில் 1½ கோடி பேர் பயன் பெற்றனர்
ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு வசதியுடன் 7½ கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். நேற்று ஒரே நாளில் மட்டும் 1½ கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டது.
கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால் தேர்தலில் போட்டியிட 13 ஆண்டுகள் தடை மத்திய அரசு புதிய சட்டம்
கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால், தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் தடை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. கிரிமினல் பின்னணி கிரிமினல் பின்னணி கொண்டவர்களை மந்திரிகளாக நியமிப்பதை கைவிடுவதை பிரதமர் மற்றும் முத
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மாத சம்பள உச்சவரம்பு ரூ.15 ஆயிரம் ஆக உயர்வு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000 ஆகிறது
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மாத சம்பள உச்சவரம்பு ரூ.15 ஆயிரம் ஆக உயர்கிறது. குறைந்தபட்ச ஓய்வூதியமும் ரூ.1000 ஆகிறது. பட்ஜெட் அறிவிப்பு தனியார் துறையில் வேலை செய்கிறவர்களுக்கு மத்திய அரசு இ.பி.எப்.ஓ. என்னும் அமைப்பின் மூலம் தொழிலாளர் வருங்கால வை
ஏழைகளுக்கு மருத்துவ காப்பீடுடன் புதிய சுகாதார திட்டம் மத்திய மந்திரி தகவல்
ஏழைகளுக்கு மருத்துவ காப்பீடுடன் கூடிய புதிய சுகாதார திட்டம் பற்றி மத்திய மந்திரி ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார். இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்த்தன் கூறியதாவது:– சுகாதார திட்டம் ஜனாதிபதி உரையில், நாடு முழுவதும் சுகாதார சேவைக்கு உறுதி பூண்டுள்ளத
எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் ஊடுருவ முயன்ற 10 தீவிரவாதிகள் விரட்டியடிப்பு
எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 10 தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர். எல்லையில் பதற்றம் இந்தியா– பாகிஸ்தான் இடையே 2003–ம் ஆண்டு நவம்பர் மாதம் சண்டை நிறுத்த உடன்படிக்கை அமலுக்கு வந்தது. ஆனால்
நரேந்திர மோடி நாளை ஜப்பான் பயணம் இருநாட்டு உறவுகள் மேம்படும் என ஜப்பானிய மொழியில் அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) ஜப்பான் செல்கிறார். இருநாட்டு உறவுகளை புதிய நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் ஜப்பான் மொழியில் தெரிவித்துள்ளார். நாளை ஜப்பான் பயணம் பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் பயணமாக நாளை (சனிக்கிழமை) ஜப்பான
பா.ஜனதா கூட்டணியில் இருந்து அரியானா மாநில கட்சி விலகியது
அரியானா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி உடைந்தது. இதனால் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜனதா முடிவு செய்துள்ளது. கூட்டணி மாற்றம் அரியானா மாநிலத்தில் முதல்–மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்–மந்த
‘‘உலகம் இருக்கும்வரை கற்பழிப்பும் இருக்கும்’’ திரிணாமுல் எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை
நாடு முழுவதும் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் அதை நியாயப்படுத்தி பேசி இருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பெயர் தீபக் ஹல்தர். தனது டைமண்ட் ஹார்பர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்
லாலு பிரசாத்துடன் அருண் ஜெட்லி சந்திப்பு உடல் நலம் விசாரித்தார்
பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் யாதவுக்கு மும்பை ஆசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இருதய அறுவை சிகிச்சை நடந்தது. லாலு பிரசாத் யாதவ் இன்னும் 3 முதல் 4 நாட்கள் வரை தீவி
மத்திய மந்திரி சதானந்த கவுடா மகன் மீது கற்பழிப்பு வழக்கு நடிகை புகாரின் பேரில் நடவடிக்கை
நடிகை புகாரை தொடர்ந்து மத்திய மந்திரி சதானந்த கவுடா மகன் மீது கற்பழிப்பு, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மத்திய மந்திரியின் மகன் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார் பேட்டை தாலுகா, குஷால் நகரை சேர்ந்த நானய்யா என்பவரின் மகள் சுவாதிக்கும், மத
சதானந்த கவுடா மகனுடன் திருமணம் ஆடியோ ஆதாரங்களை நடிகை வெளியிட்டார் பரபரப்பு தகவல்
சதானந்த கவுடா மகன் மீது குற்றம்சாட்டிய நடிகை மைத்திரி கூடுதல் ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பு புகார் கூறினார். நடிகை மைத்திரி நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– காதல் ‘‘எனக்கும், கார்த்திக் கவுடாவுக்கும் முதலில்
மணிப்பூர் மாநில கவர்னர் ராஜினாமா ஜனாதிபதியிடம் நேரில் கடிதம் அளித்தார்
மணிப்பூர் மாநில கவர்னர் ராஜினாமா செய்தார். ஜனாதிபதியை நேரில் சந்தித்து அவர் பதவி விலகல் கடிதத்தை அளித்தார். ராஜினாமா மணிப்பூர் மாநில கவர்னர் வினோத் குமார் துக்கல். அவர் மிசோரம் மாநில கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், அவர் நேற
வழக்கு விசாரணை நிறைவடைந்தது சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20–ந் தேதி தீர்ப்பு பெங்களூர் தனிக்கோர்ட்டு அறிவிப்பு
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நிறைவடைந்ததை அடுத்து செப்டம்பர் 20–ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூர் தனிக்கோர்ட்டு நேற்று அறிவித்தது. சொத்து குவிப்பு வழக்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 5–ந் தேதி நடை திறப்பு ஓணம் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் திறந்து இருக்கும்
ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 5–ந் தேதி திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாக
கோவை அருகே ரூ.15 கோடி பணம் இருந்த வேன் கவிழ்ந்து விபத்து
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையில் இருந்து ரூ.15 கோடி பணம் 6 பெட்டிகளில் ஏற்றப்பட்டு கேரள மாநிலம் திருச்சூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வங்கி அதிகாரி பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள், மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் வேனில் இருந்தனர். மதுக்கரை பாஸ்ரோடு, பாலத்துறை அருகே சென்றபோது, பாலக்காட்டில் இருந்து வந்த கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை திருப்பினார். அப்போது அந்த காரில் மோதியபடி வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேன் டிரைவர் லேசான காயம் அடைந்தார்.
‘எனது தந்தையின் மறைவை அரசியல் ஆக்காதீர்கள்’ கோபிநாத் முண்டே மகள் பங்கஜா எம்.பி. எச்சரிக்கை
மறைந்த பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரியுமான கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா எம்.பி. நேற்று மராட்டிய மாநிலம் சிந்த்கேத் ராஜா பகுதியில் பிரமாண்ட பேரணியை தொடங்கினார். இந்த பேரணி வாயிலாக மொத்தம் 3 ஆயிரம் கி.மீ. பயணிக்கும் அவர், 21 மாவட்டங்களில் 79 சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்களை சந்திக்கிறார். இந்நிலையில், பேரணியை தொடங்கியதும் பங்கஜா எம்.பி. பேசுகையில், ‘‘எனது தந்தையின் மறைவால் முதலைக்கண்ணீர் வடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். நீங்கள் என் தந்தையின் மறைவை அரசியல் ஆக்காதீர்கள்’’ என்றார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மாத சம்பள உச்சவரம்பு ரூ.15 ஆயிரம் ஆக உயர்வு
தனியார் துறையில் வேலை செய்கிறவர்களுக்கு மத்திய அரசு இ.பி.எப்.ஓ. என்னும் அமைப்பின் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் சேருவதற்கு தனியார் துறையில் வேலை செய்கிறவர்களுக்கு மாத சம்பள உச்சவரம்பு ரூ.6,500 ஆக இருந்து வருகிறது. இந்த உச்ச வரம்பு ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தப்படும், இதே போன்று இந்த திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1000 ஆக அதிகரிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டின் போது நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.
பிரம்பு அடிக்கு 3 மாணவர்கள் பயந்து ஆற்றில் குதித்து தற்கொலை 2 ஆசிரியர்கள் கைது
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம், வசாயில் வகாத் குருகுல் என்ற சர்வதேச பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மும்பை மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது14), போரிவிலி மேற்கு பகுதியை சேர்ந்த பிரபுல் நாராயண் (14), டோம்பிவிலி மேற்கு பகுதியை சேர்ந்த குசால் நிலேஷ் (14) ஆகிய மூன்று மாணவர்களும் பள்ளி விடுதியில் தங்கி 9–ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த 25–ந் தேதி இரவு மாணவர்கள் 3 பேரும் திடீரென காணாமல் போய் விட்டனர். இந்த நிலையில், நேற்று மாணவர்கள் மூன்று பேரும் அங்குள்ள சூக் நதியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து விரார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இருதய அறுவை சிகிச்சை: லாலு பிரசாத், 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பார்
பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் யாதவ் இருதய நோய் காரணமாக கடந்த திங்கட்கிழமை மும்பை ஆசியன் ஹார்ட் இன்ஸ்டியூட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது இருதயத்தில் உள்ள வால்வு பழுதடைந்து இருந்ததும், இருதயத்தில் 3 மில்லி மீட்டர் அளவு ஓட்டை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
நிதி தீண்டாமையை அகற்றவே அனைவருக்கும் வங்கி கணக்கு பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா’ (பிரதமர் மக்கள்–நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டது. இத்திட்டத்தை இன்று டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இன்றே இத்திட்டம் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி; நிதி தீண்டாமையை அகற்றவே அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று பேசினார்.
அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா’ (பிரதமர் மக்கள்–நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டது. இத்திட்டத்தை இன்று டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இன்றே இத்திட்டம் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்படுகிறது. மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிகளில், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்கள். அனைவருக்கும் வங்கி கணக்கு அளிப்பதற்காக, கிளைகள் தோறும் வங்கிகள் சார்பில் முகாம்கள் நடத்தப்படுகிறது.
'ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்பாடுகள் இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது' மலேசிய பிரதமர் கடும் கண்டனம்
ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போர் புரிந்து வருகிறார்கள். அவர்கள் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது வசம் கொண்டு வந்து உள்ளனர். அவர்களை அடக்க அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. இந்நிலையில் 'ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்பாடுகள் இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது' என்று மலேசியா பிரதமர் நஜீப் ராசக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
12ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது
கன்னோஜ் மாவட்டத்தின் குரியானா கிராமத்தை சேர்ந்த மாணவி வேதியல் ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மாணவி நேற்று பள்ளியில் தேர்வு விண்ணப்பம் சமர்பிக்க சென்றுள்ளார். அப்போது அவரை வேதியல் ஆசிரியர் தாராம்பால் சிங் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அழுது கொண்டே வீட்டுக்கு திருப்பிய பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். என்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் உடனடியாக போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். புகாரை ஏற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியர் தாராம்பால் சிங்கை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும், இதனை மீறி இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் வருகிற 25–ந்தேதி இஸ்லாமாபாத் நகரில் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா திடீரென ரத்து செய்தது.
பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதால் கல்லூரியில் மாணவர்கள் மோதல்; 12 பேர் காயம்
சண்டிகாரின் ஜவ்லான் காலன் கிராமத்தில் உள்ள சுவாமி பரமானந்த் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தங்கும் விடுதியில் மாணவர்கள் கடந்த செவ்வாய் இரவு இலங்கை - பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளனர். 15 மாணவர்கள் கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர். இதில் 8 மாணவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது அதனை கொண்டாடியுள்ளனர். இதனால் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பயணியின் பையை கடித்து குதறிய எலிகள்; 15 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க ரெயில்வேக்கு உத்தரவு
டெல்லியை சேர்ந்த பன்சால் என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி டெல்லியில் இருந்து கேரளா மாநிலம் ஏர்ணாகுளத்திற்கு வந்தார். அவர் ரெயிலில் வந்தபோது அவரது ஆடைகள் இருந்த பைகளை ரெயிலில் இருந்த எலிகள் கடித்து குதறியது. அவரது துணிகளை எலிகள் துண்டு துண்டாக வெட்டியுள்ளது. இதனை பார்த்த பன்சால் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். ஓடும் ரெயிலில் எலிகள் செய்த அட்டகாசத்தால் அவரது துணிகள் எல்லாம் கிழிந்துவிட்டன. இதனையடுத்து பன்சால் ரெயில்வே கவனக்குறைவு தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி புதுடெல்லி நுகர்வோர் (பூசல்கள்) குறை தீர்ப்பாணையத்தைய் நாடினார். மேலும், என்னுடைய பொருட்கள் சேதம் அடைந்ததற்கு ரூ. 18, 400 நஷ்ட ஈடாக ரெயில்வேயிடம் பெற்று தரவேண்டும் என்று கேட்டு கொண்டார்.
காட்கோபரில் துணிகரம் தனியார் வங்கியில் புகுந்து ரூ.54 லட்சம் கொள்ளை மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
காட்கோபரில், தனியார் வங்கியில் புகுந்து கள்ளச்சாவி மூலம் பெட்டகத்தை திறந்து ரூ.54 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மும்பை காட்கோபர் மேற்கு பகுதியில் ஒரு தனியார் வங்கி உள்ளது. சம்பவத்தன்று வங்கி ஊழியர் ஒருவர் பரிவர்த்தனை தேவைக்காக பணம் எடுப்பதற்காக வங்கி ரகசிய அறையில் உள்ள பணப்பெட்டகத்தை திறந்தார். அப்போது, அதில் பணம் ஏதும் இல்லை. அதில் இருந்த ரூ.54 லட்சம் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி வங்கி மேலாளர் மற்றும் காசாளரிடம் தெரிவித்தார். இதனால் பதறிப்போன அவர்கள் சம்பவம் குறித்து காட்கோபர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்
சர்ச்சைக்குரிய பா.ஜனதா எம்.பி. யோகி ஆதித்தியானாத் உ.பி.யின் நட்சத்திர பிரச்சாரகர் ஆகிறார்
உத்தரபிரதேச மாநிலத்தில் 12 சட்டமன்றத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று அக்கட்சியின் மாயாவதி முன்னதாகவே அறிவித்துவிட்டார். இதனால் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாடி மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் அமோக வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனையை அக்கட்சி கையில் எடுக்க உள்ளது.
'பூமி இருக்கும் வரையில், பாலியல் பலாத்காரமும் இருக்கும்' மம்தா பானர்ஜிக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள கட்சியினர்
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில டைமண்ட் ஹார்பர் சட்டமன்றத் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீபக் ஹல்டார் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் “பாலியல் பலாத்காரம் முந்தைய காலத்தில் இருந்துள்ளது. தற்போதும் உள்ளது. பூமி இருக்கும் வரையில், பாலியல் பலாத்காரமும் இருக்கும்”. என்றார். தீபக்கின் இந்த பேச்சு விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் மம்தாவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
Wednesday, August 27, 2014
எல்.பி.ஜி.கியாஸ் சிலிண்டர் பெறுவதில் சலுகை;மத்திய தொலை தொடர்ப்புதுறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தகவல்
மானிய விலையில், தற்போது ஆண்டு ஒன்றிற்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் ஒன்று பெறாவிட்டாலும் ஆண்டுக்கு 12 மானிய விலை சிலிண்டர்களைப் பெறலாம் என மானிய விலை சிலிண்டர்கள் பெறுவது குறித்து மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.
திருமணமான பெண்ணுடன் உல்லாசம்: செல்போனில் படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டல் பக்கத்து வீட்டு வாலிபர் கைது
திருமணமான பெண்ணுடன் உல்லாசம்: செல்போனில் படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டல் பக்கத்து வீட்டு வாலிபர் கைது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் டிக்கெட்டில் 3,199 பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் மூலமும், இ.தரிசன கவுண்ட்டர்கள் மூலமும் 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன டிக்கெட் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
ஒருதலை காதலால் விபரீதம்: ரெயில் முன்பு பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை கடலூரை சேர்ந்தவர்
ஒருதலை காதலால் விபரீதம்: ரெயில் முன்பு பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை கடலூரை சேர்ந்தவர்
லாலு பிரசாத் யாதவுக்கு இருதய அறுவை சிகிச்சை மும்பை ஆஸ்பத்திரியில் 6 மணி நேரம் நடந்தது
பீகார் முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இருதய நோய் காரணமாக கடந்த திங்கட்கிழமை மும்பையில் உள்ள ஆசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மத்திய சிறை வளாகத்தில் கைதி, பெண்ணுடன் சேட்டை; நடவடிக்கை எடுக்க பொதுநல அமைப்புகள் கோரிக்கை
மத்திய சிறை வளாகத்தில் கைதி, பெண்ணுடன் சேட்டை; நடவடிக்கை எடுக்க பொதுநல அமைப்புகள் கோரிக்கை
லாலு பிரசாத் யாதவ் நலம் பெற வேண்டி ராஹ்டிரீய ஜனதா தள தொண்டர்கள் சிறப்பு பிரார்த்தனை
லாலு பிரசாத் யாதவ் நலம் பெற வேண்டி ராஹ்டிரீய ஜனதா தள தொண்டர்கள் சிறப்பு பிரார்த்தனை
ஒடிசாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
ஒடிசாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் 12 லட்சம் பேர் பாதிப்பு
அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் 12 லட்சம் பேர் பாதிப்பு
ஏர் இந்தியா விமான நிறுவன இணையதளம் முடங்கியது
ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்த நாளான ஆகஸ்ட் 27-ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. 2007ம் ஆண்டு இணைக்கப்பட்டது. இதையொட்டி ஏர் இந்தியா விமான நிறுவனம் இன்று முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் ரூ 100-க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது. ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 5 நாட்கள் சலுகை டிக்கெட் விற்பனை செய்யப்படும். டிக்கெட்களை ஏர் இந்தியா இணையதளம் மூலமாக மட்டுமே பெற முடியும். என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை முதல் பணிகள் இணையதளத்திற்கு படையெடுத்தனர். முன்னெப்போதும் இல்லாதவாறு இணைய தளத்திற்கு மக்கள் வந்தால் இணையதளம் முடங்கியுள்ளது.
போர் நிறுத்தம் மீறல்கள்; இந்தியா-பாகிஸ்தான் கொடி கூட்டம் இன்று நடைபெறுகிறது
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும், இதனை மீறி இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் காஷ்மீர் எல்லைபகுதிக்குள் தாக்குதல் நடத்தியது. அப்போது 40 இந்திய நிலைகள், 24 கிராமங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே உள்ளது. இதற்கிடையே எல்லைப்பகுதியில் இருந்து குக்கிராம மக்கள் வெளியேறினர்.
அமெரிக்காவிற்கு நெருக்கடி கொடுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்; இளம்பெண்ணை விடுவிக்க பணயத்தொகை கேட்டு மிரட்டல்
அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைய கைதியாக உள்ள இளம்பெண்ணை விடுவிக்க பெருந்தொகையை பணயத்தொகையாக கேட்டு மிரட்டியுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பல பகுதிகளை பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து இஸ்லாமிய நாடு உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இங்கு போராடும் தீவிரவாதிகள் பல இடங்களை கைப்பற்றி தீவிரமாக முன்னேறி வருகிறார்கள். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தீவிரவாதிகள் அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.
வீராங்கனையின் கணவர் கைது; இந்து என்று கூறி திருமணம் செய்து மதம்மாற வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு
2009ம் ஆண்டு கிழக்கு மண்டலம் சாம்பியன் பட்டம் வென்ற தேசிய துப்பாக்கி சூடுதல் வீராங்கனையான தாரா ஷாடியா(வயது 23) தனது கணவர் மதம் மாற வற்புத்தி கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரஞ்ஜீத் சிங் கோலி(வயது 30) என்ற வாலிபருடன் தாராவுக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் ஆகியுள்ளது. இருவருக்கும் இந்துமத சடங்குகள் படி திருமணம் நடந்தது. இருவரும் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். தாராவிடம் ரஞ்சீத் தான் ஒரு இந்து என்று கூறியுள்ளார்.
இன்று முதல் ரூ.100-க்கு விமான டிக்கெட் வழங்குகிறது ஏர் இந்தியா
ஏர் இந்தியா தனது பயணிகளுக்கு சலுகை கட்டணத்தை தொடங்கியுள்ளது. இச்சலுகை திட்டத்தின்கீழ் ரூ 100 ரூபாய்க்கு டிக்கெட் (வரிகள் தவிர) விற்பனை செய்யப்படும். விமான டிக்கெட்களை ஏர் இந்தியா இணையதளம் மூலமாக மட்டுமே பெற முடியும். ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 5 நாட்கள் சலுகை டிக்கெட் விற்பனை செய்யப்படும்.” என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஏர் இந்தியா நிறுவனம் இத்தினத்தை கொண்டாடுகிறது. விழாவையொட்டி சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது.
கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ள மந்திரிகளை தகுதிநீக்கம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
குற்றப்பின்னணி கொண்டவர்களை மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும் என்று மனோஞ் நரூலா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2004ம் ஆண்டு மனுதாக்கல் செய்தார். அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மந்திரியாக பதவி வகித்த லல்லு பிரசாத் யாதவ், முகமது தஸ்லிமுதீன், ஜெய் பிரகாஷ் யாதவ் ஆகியோரை மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த மனு தள்ளுபடி அப்போது செய்யப்பட்டது. பின்னர் நாட்டின் 5 மூத்த நீதிபதிகளின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
Tuesday, August 26, 2014
அசாமில் தீவிரவாதிகள் அட்டூழியம்; 16 வயது சிறுமியை வீட்டிலிருந்து வெளியே இழுத்து சுட்டுக் கொன்றனர்
இந்தியா-பூடான் எல்லையில் உள்ள திவிமக்ரி என்ற கிராமத்தில் 16 வயது சிறுமியை கடந்த 20ம் தேதி தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படைக்கு சிறுமி தகவல் தெரிவித்ததாக குற்றம் சாட்டி சிறுமியை தீவிரவாதிகள் அவரது பெற்றோர் முன்னிலையில் 9 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். சிறுமி பொதுமக்கன் கண் எதிரே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததார். முன்னதாக சிறுமியை தீவிரவாதிகள் கொடுமையாக தாக்கியுள்ளனர். சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கிறது. என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
'இந்தியாவில் எபோலா நோய் பாதிப்பு இல்லை' மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ்வர்தன்
எபோலா பாதித்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் 44 ஆயிரத்து 700 இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் ஏராளமானோர் படிப்படியாக தாயகம் திரும்பி வருகிறார்கள். நேற்று 3 வெவ்வேறு விமானங்கள் மூலம் மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையம் வழியாக லைபீரியா மற்றும் நைஜீரியா நாடுகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தனர். இவர்கள் அனைவரும் தீவிர முன்னெச்சரிக்கை பரிசோதனைக்கும், கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்டு எபோலா நோயின் தாக்கம் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கற்பழிப்பு வழக்கில் சிக்கிய டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் இடைநீக்கம்
மும்பையை சேர்ந்த 25 வயது மாடல் அழகி ஒருவர் கடந்த மாதம் மால்வானி போலீஸ் நிலையத்தில், போலீஸ் டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் மீது பரபரப்பு கற்பழிப்பு புகார் கொடுத்தார். புகாரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 தடவை தன்னை டி.ஐ.ஜி.சுனில் பரஸ்கர் கற்பழித்துவிட்டதாக தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதைதொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு ஆளான டி.ஐ.ஜி.சுனில் பரஸ்கர் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். இதனால், அவர் கைதாவில் இருந்து விலக்கு பெற்றார்.
திட்ட கமிஷனுக்கு மாற்றாக புதிய குழு எப்படி இருக்க வேண்டும்? யஷ்வந்த் சின்கா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘திட்ட கமிஷன் கலைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக புதிய அமைப்பு உருவாக்கப்படும். இளைஞர் சக்தியை நாட்டுக்கு பயன்படுத்துதல், மாநில அரசுகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தல், மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவற்றை நிறைவேற்றுவதற்காக, இந்த புதிய அமைப்பு உருவாக்கப்படும்’ என்று அவர் கூறினார். பின்னர், புதிய திட்ட குழு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் யோசனை கேட்டார். அதற்காக இணையதளத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.
மராட்டியம், ராஜஸ்தான், கர்நாடகா, கோவா ஆகிய 4 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
மராட்டியம், ராஜஸ்தான், கர்நாடகா, கோவா ஆகிய 4 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரி கல்யாண்சிங் ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவா கவனர்னராக மிருதுலா சிங்கா, மராட்டிய மாநில கவர்னராக வித்யாசாகர் ராவ், கர்நாடக மாநில கவர்னராக வஜுபாய் ருதபாய் வலாவை நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எல்லையில் பாகிஸ்தான் நிலைகள் அருகே தீவிரவாதிகள் முகாம்; கிராமங்களை குறிவைக்கிறது பாக். ராணுவம்
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும், இதனை மீறி இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்றும் காஷ்மீர் எல்லைபகுதிக்குள் தாக்குதல் நடத்தியது. அப்போது 40 இந்திய நிலைகள், 24 கிராமங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே உள்ளது. இதற்கிடையே எல்லைப்பகுதியில் இருந்து குக்கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர்.
முசாபர்நகர் கலவரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு இசெட் பிரிவு பாதுகாப்பு
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர கலவரம் மூண்டது. இதில் 60 பேர் பலியானார்கள். 90 பேர் காயம் அடைந்தனர். ஏராளமான மக்கள் கலவரத்துக்கு பயந்து கிராமங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 50 ஆயிரம் குடும்பங்கள் சொந்த இடங்களைவிட்டு பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்தனர். அப்போது கலவரத்தை தூண்டியதாக பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சங்கீத் சோம் மீது ஜாமீனில் வரமுடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இடைத்தேர்தல்; பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பு
பிரதமர் நரேந்திரமோடி பாராளுமன்ற தொகுதியில் குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் அவர் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதனன் மிஸ்திரியை 5 லட்சத்து 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் நரேந்திரமோடி 3 லட்சத்து 71 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்தார்.
Monday, August 25, 2014
‘எபோலா வைரஸ்’ பாதிக்கப்பட்ட லைபீரியா நாட்டில் இருந்து வந்த 6 இந்திய பயணிகளுக்கு பரிசோதனை
‘எபோலா வைரஸ்’ நோய் பாதித்த லைபீரியா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு 112 இந்திய பயணிகள் வருவார்கள் என்று கூறப்பட்டது. இவர்கள் பல்வேறு விமானங்களில் வருகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், டெல்லி விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்திற்கு ‘எபோலா வைரஸ்’ பாதிக்கப்பட்ட லைபீரியா நாட்டில் இருந்து வந்த 6 இந்திய பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. விமானம் ஓரம் கட்டப்பட்டு மருத்துவ குழுவினர் விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. வைரஸ் அறிகுறி இருந்தால் அந்த பணிகள் தனிமை படுத்தப்பட்டு கூடுதல் சோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
புதிய விசாரணை குழு அமைக்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி கோரிக்கை
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு 1–ந் தேதி முதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெண் நீதிபதி ஒருவர், 2012 அக்டோபர் முதல் மாவட்ட கூடுதல் மற்றும் செசன்சு நீதிபதியாக பதவி வகித்து வந்தார். விசாகா கமிட்டி தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வந்த இவர், கடந்த மாதம் 15–ந் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவரின் இந்த திடீர் முடிவுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் ‘செக்ஸ்’ தொல்லையே காரணம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பெண் நீதிபதி, ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மத்திய சட்ட மந்திரி உள்ளிட்டோருக்கு 9 பக்க புகார் கடிதம் எழுதினார்.
பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. கோரிக்கை
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்றும் காஷ்மீர் எல்லைபகுதிக்குள் தாக்குதல் நடத்தியது. அப்போது 40 இந்திய நிலைகள், 24 கிராமங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும், இதனை மீறி இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆதார் அட்டை பெற முடியவில்லை என்று 11 வயது சிறுவன் தற்கொலை
விசாகப்பட்டணம் மாவட்டம் திகுவா கோலாபுட் கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் பாலகிருஷ்ணன். சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 வகுப்பு படித்து வந்துள்ளான். அரசு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையை அவனது கணக்கில் இணைக்க ஆதார் அடையாள அட்டையை சிறுவனிடம் பள்ளி ஆசிரியர் கேட்டுள்ளார். அரகு மற்றும் விசாகப்பட்டணம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் சிறுவனால் ஆதார் அடையாள அட்டை பெற முடியவில்லை. சிறுவனின் கையில் மூன்று விரல்கள் ஒன்றாக சேர்ந்து இருந்ததால் அவரது விரல் கேரகை டிஜிட்டலில் பதிவு செய்யப்படவில்லை. ஆதார் அடையாள அட்டை பதிவாளர்கள் சிறுவனுக்கு அட்டை வழங்க மறுத்துள்ளனர். என்று கூறப்படுகிறது.
‘எபோலா வைரஸ்’ பாதிக்கப்பட்ட லைபீரியா நாட்டில் இருந்து 112 இந்திய பயணிகள் இன்று வருகை மருத்துவ பரிசோதனைக்கு தீவிர ஏற்பாடு
தென் ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா வைரஸ்’ நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ‘எபோலா வைரஸ்’ நோய் பாதித்த லைபீரியா நாட்டில் இருந்து மும்பைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) 112 இந்திய பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் பல்வேறு விமானங்களில் வருகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
இந்தியா வந்த நைஜீரிய வாலிபருக்கு ‘எபோலா வைரஸ்’ நோய் அறிகுறியா? மருத்துவமனையில் அனுமதி
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள லைபீரியா, நைஜீரியா, மாலி, கின்யா, உள்பட 6 நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நாடுகளில் இக்கொடிய நோய்க்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோய் தற்போது உலகையே மிரட்டி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். ஐ.நா. அமைதிப்படையில் அங்கம் வகிக்கும் ஏராளமான இந்திய ராணுவ வீரர்களும் அங்கு பணிபுரிந்து வருகிறார்கள்.
அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி, 28–ந் தேதி தொடங்கி வைக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா’ (பிரதமர் மக்கள்–நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டது. இத்திட்டத்தை 28–ந் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அதே நாளில் இத்திட்டம் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்படும். மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிகளில், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு தொடங்கி வைப்பார்கள். மேலும், அனைவருக்கும் வங்கி கணக்கு அளிப்பதற்காக, கிளைகள் தோறும் வங்கிகள் சார்பில் முகாம்கள் நடத்தப்படும்.
இமயமலையில் அதிசய மூலிகை: சஞ்சீவனி என்கின்றனர் ஆய்வாளர்கள்
இந்திய விஞ்ஞானிகளுக்கு உடலில் பாதுகாப்பு அமைப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு அதிசயம் மூலிகை கிடைத்தது. உயிர்வாழ்வதற்கே கடினமான பகுதிகள் கொண்ட இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த அதிசய மூலிகை கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும். சவாலான வாழ்விடச் சூழலில் மக்களை பாதுகாத்து கொள்ளும் சக்தியை வழங்கும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகை ராமாயணத்தில் அனுமார் கொண்டு வந்ததாகக் கருதப்படும் சஞ்சீவனி மூலிகை போன்று உள்ளது. என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மூலிகை தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்திய இந்து மதம் காவியங்களில் சஞ்சீவினி மூலிகை உயிரினங்களுக்கு உயிர் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய பா.ஜனதா, காங்கிரஸ் அரசுகள் மீது குற்றச்சாட்டு 1993 முதல் 2010-ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு சட்டவிரோதமானது சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கடந்த 2012–ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இந்த ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர
நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 5 பொதுநல மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா அ
4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு: ஐக்கிய முற்போக்கு கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி பீகாரில் லாலு – நிதிஷ் கூட்டணி அபாரம்
பீகார், கர்நாடகம், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 10 தொகுதிகளை கைப்பற்றியது. 18 தொகுதிகள் பீகார் மாநிலத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள், மத்திய பிரதேசம், கர்நாடகத்த
ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரியுடன் கேரள கவர்னர் ஷீலா தீட்சித் சந்திப்பு வேறு மாநிலத்துக்கு மாற்றினால் பதவி விலக முடிவு
ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரை கேரள கவர்னர் ஷீலா தீட்சித் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு கடந்த 5 மாதங்களாக கேரள கவர்னராக டெல்லி மாநில முன்னாள் முதல்–மந்திரி ஷீலா தீட்சித் பதவி வ
காஷ்மீரில் தொடரும் அட்டூழியம் தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் பலி
ஜம்மு–காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் லோலாப் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்தனர். ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ராணுவ வீரர் தனஞ்ஜெயகுமார்
சிலவரி செய்திகள்
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த இலங்கை அதிபர் ராஜபக்சே சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட ஒரு கமிஷனை அமைத்து உள்ளார். அதில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை
பீகார் முன்னாள் முதல்–மந்திரி லாலு பிரசாத், மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி
ராஷ்டிரீய ஜனதாதள கட்சி தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியுமான லாலுபிரசாத் நேற்று காலை மும்பையில் உள்ள இதயநோய்க்கான சிறப்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழு அளவிலான பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதுகுறித்து தலைமை மர
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தந்தை கைது
இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங்கின் தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான யோக்ராஜ் சிங், அரியானா மாநிலம் பஞ்ச்குலா நகரில் உள்ள வீட்டில் வசிக்கிறார். நேற்று பகலில் அவர், தனது மைத்துனர் பூபிந்தருடன் வெளியில் சென்று விட்டு காரில் வீடு திரு
கர்நாடகா, மராட்டியம் உள்பட 4 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு பெயர்களை பரிந்துரை செய்தது
கர்நாடகா, மராட்டியம் உள்பட 4 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் பெயர்களை உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. கவர்னர்கள் மாற்றம் மத்தியில் பாரதீய ஜனதா தலைமையிலான அரசு அமைந்ததும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமனம் செய்யப்பட்ட
போர் நிறுத்தத்தை மீறி 40 இந்திய நிலைகள், 24 கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீச்சு 3 பேர் படுகாயம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்றும் காஷ்மீர் எல்லைபகுதிக்குள் தாக்குதல் நடத்தியது. அப்போது 40 இந்திய நிலைகள், 24 கிராமங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறல் இந்தியாவுக்கும்,
டெல்லியில் 2 முக்கிய இடங்களில் தீ விபத்து
டெல்லியில் வர்த்தக மையங்களாக விளங்கும் சாந்தினி சவுக் மற்றும் கன்னோட் பிளேஸ் ஆகிய 2 இடங்களில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. காலை 8 மணியளவில் கன்னோட் பிளேசில் உள்ள ராமா என்ற கட்டிடத்தில் தீப்பிடித்தது. இது மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அருகில் இருந்த உடற்பயிற
மத்திய பிரதேசத்தில் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி நீதி விசாரணைக்கு உத்தரவு
மத்திய பிரதேசத்தில் காம்தநாத் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமாவாசை மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள சித்ரகூட் நகரில் காம்தநாத் பகத் மலைக்கோவில் உள்ளது. அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை முதலே இங்கு ஏராளமான ப
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்த பின்புதான் நடவடிக்கை: மத்திய அரசு
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை அளித்த பின்புதான் மத்திய அரசு தனது இறுதி முடிவை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் இதனால் அரசுக்கு 1.83 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தி பட தயாரிப்பாளர் அலி மொரானி வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு
மும்பை ஜுஹு பகுதியில் உள்ள பிரபல இந்தி பட தயாரிப்பாளர் அலி மொரானியின் இல்லத்தை நோக்கி இரு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடி விட்டனர். கடந்த சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. மொரானியின் இல்லத்தை நோக்கி அடையாளம் தெரியாத இரு நபர்கள் 5 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாபியா கும்பல் தலைவன் ரவி பூஜாரியிடம் இருந்து மொரானிக்கு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஜுஹ§ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொரானி சகோதரர்கள் (அலி மற்றும் கரீம்) ராஜா ஹிந்துஸ்தானி, டாமினி, துஷ்மனி, ஹம்கோ தும்சே பியார் ஹை உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளனர்.
டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் பயங்கர தீ விபத்து: 25 தீ அணைப்பு வண்டிகள் விரைந்தன
புதுடெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள கினாரி பஜாரில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதிக்கு 25 தீ அணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது வரை எந்த இறப்புமோ காயங்களோ யாருக்கும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட இடம் மிகவும் குறுகிய சந்தாக இருப்பாதல் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மின்மாற்றியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
பீகாரில் உயிரை கொடுத்து கொள்ளையை தடுத்த பாதுகாவலர்
பீகாரில் உயிரை கொடுத்து கொள்ளையை தடுத்த பாதுகாவலர்
காம்தநாத் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள சித்ரகூட் நகரில் காம்தநாத் பகத் மலைக்கோவில் உள்ளது. சோம்வதி அமாவாசையையட்டி அதிகாலை முதலே இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர். மேலும் பெண்கள் உள்பட ஏராளமானோர் மலையை சுற்றி அங்கபிரதட்சணமும் செய்து கொண்டிருந்தனர். நேரம் செல்லச்செல்ல கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், அவர்கள் ஒருவரையருவர் முந்தி செல்ல முயன்றனர். இதனால் அங்கு திடீரென நெரிசல் ஏற்பட்டது.
இந்தியாவில் "ரைஸ் பக்கெட்" சவால்
அமெரிக்காவில் ஏ.எல்.எஸ். என்று அழைக்கப்படுகிற நரம்பு சிதைவு நோய் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கு ஒரு அமைப்பு வினோதமான உத்தி ஒன்றை திட்டமிட்டது. இதன்படி பிரபலங்களிடம் நன்கொடை வசூலிப்பதற்கு ஒரு நூதன சவாலை அது முன் வைத்துள்ளது. சில்லென்றிருக்கும் ஒரு பக்கெட் ஐஸ் தண்ணீரில் குளியல் போட வேண்டும் என்பதே சவால். சவாலை ஏற்று ஐஸ் தண்ணீர் குளியல் போட்டால் 10 டாலர் நன்கொடை, ‘அய்யோ, ஐஸ் குளியலா, ம்கூம்’ என கூறி பின்வாங்கி விட்டால் 100 டாலர் நன்கொடை தர வேண்டும்.
நான்கு மாநில கவர்னர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படுகிறது?
மகாராஷ்டிரா, கர்நாடாகா, ராஜஸ்தான் மற்றும் கோவா உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு நியமிக்கப்படும் புதிய கவர்னர்கள் யார் என்பதை இன்று மத்திய அரசு அறிவிக்கும் என்று அரசின் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கவனர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இந்த பட்டியலில் பாஜக மூத்த தலைவர் ஸ்டால்வார்ட் கல்யான் சிங் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
'பாராளுமன்றத் தேர்தலில் செய்த தவறை மக்கள் திருத்திக் கொண்டனர்' லாலு பிரசாத் சொல்கிறார்
பீகார் சட்டசபையில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஆளும் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாரத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அடுத்ததாக நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு இது அரையிறுதி தேர்தலாக கருதப்படும் இந்த தேர்தலில் மகா கூட்டணி 6 தொகுதியை கைப்பற்றியுள்ளது. 9 தொகுதியில் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற 6 தொகுதிகளை மட்டுமே 3 கட்சிகள் இணைந்த கூட்டணி வெற்றி பெற்றது.
நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நேர்மை வெளிப்படை தன்மை இல்லை-சுப்ரீம் கோர்ட்
நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நேர்மை வெளிப்படை தன்மை இல்லை-சுப்ரீம் கோர்ட்
1993 முதல் செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்துமே சட்ட விரோதமானவை: உச்ச நீதிமன்றம்
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்வதில் நடந்த முறைகேடுகள் காரணமாக அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவித்திருந்தார்.இதனை அடிப்படையாகக் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கு விசாரணையை கண்காணித்து வந்தது. இதில் பெரும்பான்மையான முறைகேடுகள் 2006–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை நடைபெற்ற சுரங்க ஒதுக்கீடுகளில் தான் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தான் நிலக்கரி துறைக்கும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் சி.பி.ஐ. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் இருந்து நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் குறித்து விசாரணையை விரிவுபடுத்தியது.
கேரளா கவர்னர் ஷீலா திட்சீத் விரைவில் ராஜினாமா செய்யலாம் என தகவல்கள்
இதைத்தொடர்ந்து மேற்கு வங்காள கவர்னர் எம்.கே.நாராயணன், நாகாலாந்து கவர்னர் அஸ்வினிகுமார், உத்தரபிரதேச கவர்னர் பி.எல்.ஜோஷி, சத்தீஷ்கார் கவர்னர் சேகர்தத் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். கடந்த மாதம் புதுச்சேரி கவர்னர் வீரேந்திர கட்டாரியாவை முறைகேடு புகாரின்பேரில் மத்திய அரசு பதவி நீக்கம் செய்தது. இதேபோல் குஜராத் மாநிலத்தில் இருந்து மாற்றப்பட்டு மிசோரம் கவர்னராக நியமிக்கப்பட்ட 87 வயது கமலாபெனிவால், குஜ்ராத் மாநில கவர்னராக இருந்தபோது அதிகார துஷ்யபிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அவர் இந்த மாத தொடக்கத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், மராட்டிய கவர்னர் சங்கரநாராயணன் மிசோரம் மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். மிசோரம் மாநிலத்துக்கு செல்ல விரும்பாத சங்கரநாராயணன் நேற்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கைகலப்பில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கைது
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் சண்டிகாரில் உள்ள பஞ்குலாவிற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கடந்த சனிக்கிழமை இரவு வந்துள்ளார். அப்போது காரை பார்கிங் செய்வது தொடர்பாக அண்டைய வீட்டாருடன் அவருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. யோகராஜ் சிங் கைகலப்பில் ஈடுப்பட்டுள்ளார். மேலும், மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் யோகராஜ் சிங் மற்றும் சிலர் எங்களை தாக்கினர் என்று போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக விசாரித்த போலீசார் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங்கை கைது செய்தனர். மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவுக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது
சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் ‘கொலிஜியம்’ முறையை ஒழித்து விட்டு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் மூலம் நீதிபதிகளை நியமிக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, தற்போதுள்ள கொலிஜியம் முறை மூலம் நீதிபதிகளை நியமிக்கும் முறைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார். சுதந்திர தின விழாவில் அவர் பேசுகையில், நிர்வாகம், பாராளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்றும் ஒன்றின் அதிகாரத்தில் மற்றொன்று தலையிடக்கூடாது என்று குறிப்பிட்டார்.
பாரதீய ஜனதாவிற்கு பின்னடைவு
பீகார் சட்டசபையில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஆளும் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாரத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அடுத்ததாக நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு இது அரையிறுதி தேர்தலாக கருதப்படுகிறது. 10 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பாரதீய ஜனதா கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
Sunday, August 24, 2014
புதுடெல்லி கன்னாட் பகுதியில் தீ விபத்து; தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்
கன்னாட் பகுதியில் உள்ள ராமா கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 8 மணியளவில் கட்டிடத்தில் இருந்து புகை வெளியேறியதை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டபோது கட்டத்தில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது தெரியவில்லை. தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.
பாட்டியாலா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரனீத் கவுர் வெற்றி
பீகார் மாநிலத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கும், கர்நாடகம், மத்திய பிரதேசத்தில் மாநிலங்களில் தலா 3 தொகுதிகளுக்கும், பஞ்சாப் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 21- ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம், தல்வண்டி சபோ மற்றும் பாட்டியாலா தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. பாட்டியாலா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரனீத் கவுர் வெற்றி பெற்றுள்ளார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரியான அமரீந்தர் சிங்கின் மனைவியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரனீத் கவுர் 23,282 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான சிரோமணி அகாலி தளம் கட்சியி வேட்பாளரை தோல்வி அடைய செய்துள்ளார்.
பாரதீய ஜனதா கோட்டையில் காங்கிரஸ் வெற்றி
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா, ஸ்ரீராமலு, பிரகாஷ் ஹூக்கேரி ஆகியோர் வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆனார்கள். இதையடுத்து, அவர்கள் 3 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கர்நாடக சட்டசபைக்கு காலியாக இருந்த சிகாரிபுரா, பெல்லாரி புறநகர், சிக்கோடி ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த 21–ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.
தேசிய அளவிலானா துப்பாக்கி சுடும் வீராங்கனை மதம் மாற வற்புத்தி கணவர் கொடுமை போலீசில் புகார்
தேசிய அளவிலானா துப்பாக்கி சுடும் வீராங்கனை மதம் மாற வற்புத்தி கணவர் கொடுமை போலீசில் புகார்
எல்லைப்புற முகாமை அமித் ஷா பார்வையிட்ட பின் பாரதீய ஜனதா மற்றும் தேசிய மாநாட்டு கட்சியினரிடையே மோதல்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் எல்லையோர கிராமங்களில் உள்ள சில வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. கால்நடைகளும் உயிரிழந்து இருக்கின்றன. இதைத்தொடர்ந்து இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா மற்றும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் ஆகியோர் இன்று காலை எல்லைப்புற பகுதிகளில் அமைந்துள்ள முகாம்களுக்கு சென்றுள்ளனர்.
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர புதிய திட்டம் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தகவல்
பெண்கள், பழங்குடியின குழந்தைகள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் ஆகியோர் பொருளாதார பின்னணியை காரணமாக கொண்டு தங்களது கல்வியை தொடர முடியாமல் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நான் கூட பணம் இல்லாத காரணத்தால் தான் எனது கல்வியை பாதியில் நிறுத்திவிட்டேன். மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் 'இஷான் விகாஷ்' என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இத்திட்டத்தின்படி, ஆராய்ச்சியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் வர விரும்பும் மாணவர்களை இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிப்போம்.
பீகாரில் வாக்கு எண்ணிக்கை பாரதீய ஜனதா முன்னிலை; லாலு பிரசாத்திற்கு உடல்நலம் பாதிப்பு
பீகார் சட்டசபையில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஆளும் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாரத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பீகாரில் அடுத்ததாக நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு இது அரையிறுதி தேர்தலாக கருதப்படுகிறது. இதில் பாரதீய ஜனதா கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாரதீய ஜனதா, ஜாலே, மொகானியா, ராஜ்நகர், நார்காதியகாஞ்ம் விஜயராகவ்கார் ஆகிய 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி முகைதீன்நகர் சட்டமன்றத் தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே லாலு பிரசாத்திற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
சித்திரக்கூட் காம்நாத் கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
மத்திய பிரதேசம் மாநிலம் சாட்னா மாவட்டத்தில் உள்ள சித்திரக்கூட் காம்நாத் கோவிலில் இன்று அதிகாலை கூட்டநெரிசல் ஏற்பட்டது. அமாவாசையை யொட்டி கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் முந்தியடித்து ஓடியபோது நெரிசல் ஏற்பட்டது. என்று கூறப்படுகிறது. காலை 6 மணிக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை உயரக் கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் 35 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் இந்திய ராணுவம் பதிலடி
காஷ்மீர் எல்லையில் கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள், தற்போது குடியிருப்பு பகுதிகளை நோக்கியும் திரும்பியுள்ளதால், எல்லைப்பகுதி மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எல்லையோர கிராமவாசிகள் வெளியேறி வருகின்றனர். தொடர்ந்து இந்திய நிலைகள் மீது தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வருகிறது. காஷ்மீரில் 35 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளது.
சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை
தென்மேற்கு பருவமழை கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. சென்னையை பொருத்தமட்டில் நேற்று காலையில் வானம் தெளிவாக காணப்பட்டது. இரவு சுமார் 11.15 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், வேப்பேரி, ராயப்பேட்டை, அசோக் நகர், அடையாறு, வடபழனி, கோயம்பேடு, நுங்கம்பாக்கம், தியாகராயநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
காஷ்மீரில் 25 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் இந்திய ராணுவம் பதிலடி எல்லையோர கிராமவாசிகள் வெளியேறுகிறார்கள்
காஷ்மீரில் 25 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
காஷ்மீர் எல்லையில் தாக்குதல்: ‘‘பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுங்கள்’’ ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு
காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுக்குமாறு இந்திய ராணுவத்துக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டு உள்ளார்.
காமன்வெல்த் போட்டி, நிலக்கரி ஊழல் விசாரணை அறிக்கையில் முக்கிய தலைவர்களின் பெயர்களை சேர்க்காமல் விடுமாறு நிர்ப்பந்தம் முன்னாள் கணக்கு தணிக்கையாளர் புகாருக்கு காங். கண்டனம்
காமன்வெல்த் போட்டி, நிலக்கரி ஊழல் விசாரணை அறிக்கையில் முக்கிய தலைவர்களின் பெயர்களை சேர்க்காமல் விடுமாறு நிர்ப்பந்தம் முன்னாள் கணக்கு தணிக்கையாளர் புகாருக்கு காங். கண்டனம்
மிசோரம் மாநிலத்துக்கு மாற்றியதால் அதிருப்தி மராட்டிய கவர்னர் சங்கரநாராயணன் திடீர் ராஜினாமா தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு
மிசோரம் மாநிலத்துக்கு மாற்றியதால் அதிருப்தி மராட்டிய கவர்னர் சங்கரநாராயணன் திடீர் ராஜினாமா தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு
‘தவறான வாக்குறுதிகளை அளித்து பதவிக்கு வந்துவிட்டார்’ நரேந்திரமோடி மீது திக்விஜய்சிங் தாக்கு
நரேந்திரமோடி தவறான வாக்குறுதிகளை அளித்து பதவிக்கு வந்துவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறினார்.
சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம் டெல்லி போலீசார் தகவல்
சமூக வலைத்தளங்கள் மூலம் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சோதனை அடிப்படையில் நாக்பூரில் எத்தனால் மூலம் இயங்கும் பஸ் மத்திய மந்திரி நிதின் கட்காரி தொடங்கி வைத்தார்
சோதனை அடிப்படையில் நாக்பூரில் எத்தனால் மூலம் இயங்கும் பஸ் மத்திய மந்திரி நிதின் கட்காரி தொடங்கி வைத்தார்
மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், காஷ்மீர் 4 மாநில சட்டசபை தேர்தல் தேதி விரைவில் வெளியாகிறது
மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், காஷ்மீர் 4 மாநில சட்டசபை தேர்தல் தேதி விரைவில் வெளியாகிறது
3 நாள் சுற்றுப்பயணம் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் வியட்னாம் சென்றார்
3 நாள் சுற்றுப்பயணம் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் வியட்னாம் சென்றார்
அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
ஜெய்ப்பூர் அரண்மனையில் தீ விபத்து கலைப்பொருட்கள் சேதம்
ஜெய்ப்பூர் அரண்மனையில் தீ விபத்து கலைப்பொருட்கள் சேதம்
சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் கணக்கு சிக்கியது
சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 பேர் கணக்கு சிக்கியது
சிவில் சர்வீசஸ் தேர்வை நாடு முழுவதும் 4½ லட்சம் பேர் எழுதினர்
சிவில் சர்வீசஸ் தேர்வை நாடு முழுவதும் 4½ லட்சம் பேர் எழுதினர்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் மெடிக்கல் செக்-அப்
பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்த மம்தா சிங்கப்பூர் செல்வது ஏன்? அருண் ஜெட்லி கேள்வி
மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் அன்னிய நேரடி முதலீடு குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வரவேணடும். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீடை அனுமதித்தது. இந்த முடிவுக்கு இரண்டு கட்சிகளை தவிர மற்ற அனைத்தும் ஆதரவு அளித்தன. இடதுசாரிகளும், திரிணாமுல் காங்கிரசும்தான்
இந்தியா-பாகிஸ்தானிடையே நடக்கும் சிறிய சண்டைகள் கூட போருக்கு வழிவகுத்துவிடும்; கிலானி
ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் இந்திய ராணுவ நிலைகளின் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
பிரம்மபுத்திராவில் வெள்ள அபாயம்!
அசாமில் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை இன்று காலை முதல் நீர்வரத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வந்த அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மோடி கூட்டத்தில் ஏற்பட்ட அவமதிப்புக்கு பழிக்கு பழி; ஹூடா வேண்டுகோள்
4 நாட்களுக்கு முன் கைதாலில் நடைபெற்ற நெடுஞ்சாலைத் திட்ட தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஹரியானா முதல்வர் ஹூடா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரையும், ஹரியானா மாநில காங்கிரஸ் அரசையும் எதிர்த்து கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கோஷமிட்டனர்.
ராமர் கோவில் பிரச்சனையை 2015-ல் எழுப்புவோம்; விஷ்வ இந்து பரிஷத்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னர் அயோத்தியில் நிரந்தரமாக ராமர் கோவில் எழுப்புவது பற்றி முடிவெடுக்கப்படும் என விஷ்வ இந்து பரிஷத் இன்று தெரிவித்துள்ளது. இந்து அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்தின் மூத்த தலைவர் விநாயக் ராவ் தேஷ்பாண்டே செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார்.
யூ.பி.எஸ்.சி. மெயின்ஸ் தேர்வு; லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு
பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வின் முதன்மை தேர்வு நாடு முழுவதும் இன்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். முதன்மை தேர்வுக்கு 9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இரண்டு தாள்கள் கொண்ட முதன்மை தேர்வு எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; ராணுவ வீரர் பலி
தீவிரவாதிகள் ஊடுருவ வசதியாக எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் சுரங்கப்பாதை அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையை தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாக பாகிஸ்தான் அமைத்திருக்கக்கூடும் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த பகுதியில் இந்திய ராணுவத்தினர் முழுமையாக சோதனை நடத்தினர். ஆனால், அங்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு இருப்பதால், அப்பணி மிகவும் மெதுவாக நடந்தது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் அளவுக்கு ராணுவத்தை தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது.
மனநல குறைபாடு 100க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கிறது இந்தோ-திபெத்தியன் படை
சீனாவிற்கு எதிராக முன்னணி போர் படையாக விளங்கும் நாட்டின் இந்தோ-திபெத்தியன் படை சுமார் 100க்கும் மேற்பட்ட படை வீரர்களுக்கு ஓய்வு அளிக்கிறது. அவர்கள் மனநல குறைபாடால் பாதிக்கப்பட்டதன் காரணமாக ஓய்வு அளிக்கப்படுகிறது. தீரா அல்சைமர் நோய் உட்பட பல்வேறு வகை மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக மலையேறும் துணை ராணுவ படைவீரர்கள் மிகவும் தீவிரமான ஆபத்தை ஏற்கொள்ள கூடும் என்று படை எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச எல்லையில் முக்கியமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அவர்கள் மோசமான நிலைக்கு தள்ளப்படலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொச்சி விமான நிலையத்தில் ரோபட் செக்யூரிட்டி முறை அறிமுகம்
பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து பயணிகளை பாதுகாக்க கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரோபட் செக்யூரிட்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரில் பேஸ்புக் சமூக வலைதளம் மூலம் அறிமுகமான கல்லூரி மாணவி கற்பழிப்பு: மாணவர் கைது
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விக்ரம்சிங்(வயது 19). இவர், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.எம். படித்து வருகிறார். பீகாரை சேர்ந்த மாணவி தேவிகா(வயது 19 பெயர் மாற்றப்பட்டு உள்ளது). பனசங்கரியில் உள்ள கல்லூரியில் அவர் படிக்கிறார். தங்கும் விடுதியில் ஒன்றில் தங்கி இருந்து தேவிகா கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில், விக்ரம்சிங்கிற்கும், தேவிகாவுக்கும் ‘பேஸ்புக்‘ சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. அதன்பிறகு, இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் ராணுவ வீரர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குபுவாரா மாவட்டம் கெரான் பகுதியில், ராணுவம் விடுத்த தகவலின்படி பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று இரவு ராணுவ வீரர்கள் சோதனையில் ஈடுபட்டபோது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு ராணுவமும் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் ராகுல் குமார் என்ற ராணுவ வீரர் காயம் அடைந்தார். காயம் அடைந்த அவர் உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியாகினார். தொடர்ந்து சம்பவ இடத்தில் தீவிரவாதிகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் போதுமான பதிலடி கொடுத்து வருகிறது - அருண் ஜெட்லி
மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் மேலாண்மை வளர்ச்சி மையம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை மந்திரி அருண் ஜெட்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் “நேற்று எதனை கூறினேனோ, அதனை இன்றும் கூறுகிறேன். கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. சர்வதேச எல்லையில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் நமது எல்லைகளையும், மக்களையும் முழுமையாக பாதுகாத்து வருகின்றனர். அத்துமீறும் பாகிஸ்தானுக்கு தேவைபடும் அனைத்து பதிலடிகளையும் இந்திய ராணுவம் கொடுத்து வருகிறது.” என்று கூறினார்.
உ.பி.யில் பாலியல் தொந்தரவில் இருந்து சகோதரியை காப்பாற்றிய சகோதரர்கள் கொலை
பரேலி மாவட்டம் கார்பியா கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் நரேந்திர பால் மற்றும் ரவிந்தரா கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். வாலிபர்கள் தங்களது சகோதரிகளை பாலியல் தொந்தரவு செய்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக கொலை செய்யப்பட்டுள்ளனர். என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும், ஒருவனை தேடி வருகின்றனர்.
மிசோரம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்தால் ராஜினாமா செய்வேன் - மராட்டிய கவர்னர் சங்கர நாராயணன்
இந்நிலையில் மராட்டிய மாநில கவர்னர் சங்கர நாராயணன் மிசோரம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மராட்டிய கவர்னராக உள்ள சங்கர நாராயணன் பதவி காலம் வருகிற 2017 ஆண்டுடன் முடிவு அடைகிறது. இந்நிலையில் அவர் மிசோரம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில கவனராக இருந்த கமலா பேனிவால் மிசோரம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர் கமலா பேனிவால் ஜனாதிபதி உத்தரவின் அடிப்படையில் நீக்கப்பட்டார். இதனையடுத்து அங்கு கவர்னர் பதவி காலியாக இருந்தது. தற்போது அவ்விடத்திற்கு சங்கர நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். மராட்டிய மாநில கவர்னர் பதவியை கூடுதல் பொறுப்பாக குஜராத் கவர்னர் ஒ.பி. கோக்லி கவனித்து கொள்வார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பட்டப்பகலில் பயங்கரம் தமிழ் வாலிபரை கடத்தி குத்திக்கொலை காரில் வந்து உடலை வீசிச்சென்ற மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
மும்பை வில்லேபார்லேயில் தமிழர்கள் அதிகமாக வசித்து வரும் குடிசைப்பகுதியான நேருநகரில் சராசராம் தெருவில் வசித்து வரும் ராமனின் மகன் மாரியப்பன் என்ற மாரி (வயது38). இவர் மனைவி உமாமகேஷ்வரி மற்றும் 2 குழந்தையுடன் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகும். இந்நிலையில் மாரியப்பன் நேற்று தனது மனைவி, குழந்தையுடன் வீட்டில் அமர்ந்து டி.வி பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு செல்போனில் அழைப்பு வந்ததால் மனைவியிடம் கூறி விட்டு வெளியே சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது மனைவி உறவினர்களிடம் தெரிவித்தார். இதனை அடுத்து உறவினர்கள் மாரியப்பனை பல இடங்களில் தேடிவந்தனர்.
25 இந்திய நிலைகள், 19 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கி சூடு; கிராம மக்கள் வெளியேற்றம்
பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தந்தையும், மகனும் பலியானார்கள். படை வீரர் ஒருவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து நேற்று இரவும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு 25 இந்திய நிலைகள், 19 குக்கிராமங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையில் ஆர்.எஸ்.புரா மற்றும் அர்னியா பகுதியில் 25 இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. 19 குக்கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மோர்ட்டார் ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி எந்திர துப்பாக்கிகள் மூலமும் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. நேற்று இரவு 10.30 மணி அளவில் தொடங்கிய இந்த தாக்குதல் காலை 7:30 மணி வரை நீடித்தது. என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, August 23, 2014
தொடர்புக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர் போலீஸ்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ‘இந்தியன் முஜாகிதீன்’ தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் டெல்லியின் புறநகர் பகுதியான நங்லோய் அருகே மீர் விகார் பகுதியில் சட்ட விரோதமாக ஆயுத தொழிற்சாலை நடத்தி வந்தது கடந்த 2011–ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தொழிற்சாலையை கைப்பற்றி அழித்த சிறப்பு பிரிவு போலீசார், இது தொடர்பாக சில தீவிரவாதிகளையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தீவிரவாதிகளை போலீசார் தேடி வந்தனர்.
விராட் கோலியை திருமணம் செய்ய திட்டமா? இந்தி நடிகை பதில்
இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் இந்திய துணை கேப்டன் விராட் கோலி தனது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவை அழைத்துச் சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெஸ்ட் தொடரில் அவர் சொதப்பியதால் காதலியுடன் சுற்றியதே காரணம் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புகார்கள் சென்றுள்ளன. இந்திய அணியின் மேலாளர் சுனில்தேவ் கூறுகையில், ‘கோலி, அனுஷ்கா ஷர்மாவுடன் தங்கியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் காதலியை அழைத்து வந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பெண் தோழிகளை (காதலி) அழைத்துச் செல்வது நமது கலாசாரத்திற்கு எதிரானது. இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அறிக்கை அளிப்பேன்’ என்றார்.
ஜெய்பூர் அரண்மனையில் தீ விபத்து; விலை உயர்ந்த கலை பொருட்கள் எரிந்து சாம்பல்
ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் பழமையான ஜெய்பூர் அரண்மனையில் காலை தீ விபத்து ஏற்பட்டது. மியூசிய அலுவலக அறையில் பெரும் புகையுடன் தீ பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் 12 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பெரும் போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் யாரும் காயம் அடையவில்லை. முபாரக் மகாலில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. தீ விபத்தில் அரண்மனையில் இருந்த விலை உயர்ந்த கலை பொருட்கள் எரிந்து சாம்பலாயின என தகவல்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அரண்மனையின் ஒரு பகுதி மியூசியமாக செயல்பட்டு வருகிறது. அதன்அருகில் உள்ள பகுதியில் மன்னர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பிரதமர் மோடிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள ஏம்ய்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். வழக்கமான பரிசோதனையே அவர் மேற்கொண்டார். 63 வயதாகும் பிரதமர் மோடி காலை 7 மணிக்கு ஏம்ய்ஸ் மருத்துவமனைக்கு வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். பிரதமர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் ஆடையை அவிழ்த்து ஆசிரியை தண்டித்ததால் 12 வயது மாணவி தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் நஜியாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தார். பள்ளிக்கு வந்தபோது சிறுமியின் புத்தகப் பையினை பள்ளி ஆசிரியை சோதனை செய்தார். அப்போது மாணவியின் பையில் இருந்து ஆசிரியை செல்போன் ஒன்றை கண்டுபிடித்தார். பள்ளிக்கு மாணவி செல்போன் கொண்டு வந்ததால் கடும் ஆத்திரம் அடைந்த ஆசிரியை அவரை திட்டியுள்ளார். பலமாக அடித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்கள் ராஜ்நாத் சிங் உத்தரவு
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் 2003–ம் ஆண்டு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நமது ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் கிராமங்களை நோக்கியும் தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லை நிலவரம் குறித்து ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் படையின் இயக்குநர் டி.கே. பாட்நாயக்குடன் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டி.கே. பாட்நாயக் சர்வதேச எல்லையில் நிலவும் சூழ்நிலை, ஜம்முவில் கிராமங்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கி சூடு போன்ற பிரச்சனைகளை ராஜ்நாத் சிங்கிடம் விளக்கியுள்ளார். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் உயர் எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பாட்நாயக் குறிப்பிட்டுள்ளார். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஜம்முவில் 5 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இரவு துப்பாக்கி சூடு
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் 2003–ம் ஆண்டு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நமது ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் கிராமங்களை நோக்கியும் தாக்குதல் நடத்துவது அண்மையில் வாடிக்கையாகிவிட்டது.சிறிய மோர்ட்டார் ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசியும், தானியங்கி எந்திர துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 18 முறை பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் பாகிஸ்தான் தனது வாலாட்டத்தை நிறுத்திக்கொண்ட மாதிரி தெரியவில்லை.
மராட்டிய கவர்னர் சங்கர நாராயணன் மிசோராம் மாநிலத்திற்கு மாற்றம்
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றதும் முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்கள் பதவி விலகுவதற்கு நெருக்கடி அளித்ததாகக் கூறப்பட்டது. கோவா கவர்னர் பி.வி.வான்ச்சூ, உத்தரபிரதேச கவர்னர் பி.எல்.ஜோஷி, மேற்கு வங்காள கவர்னர் எம்.கே.நாராயணன், சத்தீஷ்கார் கவர்னர் சேகர் தத் ஆகியோர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் தங்கள் பதவிகளில் இருந்து விலகினார்கள். மிசோரம் கவர்னர் கமலா பேனிவால் ஜனாதிபதி உத்தரவின் அடிப்படையில் நீக்கப்பட்டார். மராட்டிய கவர்னர் கே.சங்கர நாராயணனையும் மத்திய அரசு பதவி விலக அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.
இலங்கை தமிழ் எம்.பி.க்கள் பிரதமருடன் சந்திப்பு தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் இலங்கை அரசு தீர்வு காண வேண்டும் நரேந்திரமோடி வற்புறுத்தல்
இலங்கையில் போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும், தமிழர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இலங்கை தமிழ் எம்.பி.க்கள் தங்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து பேச்சுவார்த்தை ந
இன்னும் 90 லட்சம் கி.மீ. செல்ல வேண்டும் 33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடைகிறது, மங்கள்யான் இஸ்ரோ அறிவிப்பு
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி: 7 பேர் படுகாயம் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
பாகிஸ்தான் ராணுவம் நேற்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தந்தையும், மகனும் பலியானார்கள். படை வீரர் ஒருவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து எல்லையோர கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்ப
தீவிரவாதிகள் ஊடுருவ வசதியாக எல்லை அருகே பாகிஸ்தான் சுரங்கப்பாதை திடுக்கிடும் தகவல்கள்
தீவிரவாதிகள் ஊடுருவ வசதியாக எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் சுரங்கப்பாதை அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, அக்னூர் சாக்லா பகுதியில் பல்லன்வாலா செக்டாரில் முன்னவார் தாவியின் குறுக
சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு பயனற்றது மத்திய அரசு தலைமை வக்கீல் கருத்து
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வது பயனற்றது என்று மத்திய அரசு தலைமை வக்கீல் கருத்து தெரிவித்துள்ளார். சங்கரராமன் கொலை வழக்கு காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் கடந்த 2004–ம் ஆண
நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஐ.என்.எஸ். காமோர்த்தா போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்த்தார், ராணுவ மந்திரி
நீர் மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ‘ஐ.என்.எஸ். காமோர்த்தா’ போர்க்கப்பலை ராணுவ மந்திரி அருண் ஜெட்லி, இந்திய கடற்படையில் சேர்த்தார். நவீன போர்க்கப்பல் இந்திய கடற்படையில் எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஆற்றல் வாய்ந்த ‘கார்வெட்’ ரக போ
நாவல் ஆசிரியர் இரா.நடராஜனுக்கு பால சாகித்ய அகாடமி விருது
தமிழகத்தை சேர்ந்த நாவல் ஆசிரியர் இரா.நடராஜனுக்கு பால சாகித்ய அகாடமி விருது கிடைத்து உள்ளது. சிறந்த நாவல்கள், சிறுகதை நூல்களை தேர்வு செய்து அவற்றை எழுதிய எழுத்தாளர்களை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் வகையில் மிக உயர்ந்த விருதான ‘பா
‘பி.கே.’ இந்தி சினிமாவில் நிர்வாண காட்சி: நடிகர் அமீர்கான் பதில் அளிக்க மும்பை கோர்ட்டு உத்தரவு
‘பி.கே.’ இந்தி சினிமாவில் நிர்வாண காட்சியில் நடித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு நடிகர் அமீர்கானுக்கு மும்பை கோர்ட்டு உத்தரவிட்டது. நிர்வாண காட்சி இந்தி நடிகர் அமீர்கானின் ‘பி.கே.’ திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த படத்தின் போ
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, அதுதொடர்பான மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சிவல் சர்வீசஸ் தேர்வு சிவில் சர்வீசஸ் எனப்படும் யு.பி.எஸ்.சி. தேர்வின் இரண்டாம் தாளில் ஆங்கில திறனறிதல் பகுதி, மாநில மொழியை மட்டுமே அறிந்தவ
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு எனக்கு எதிராக எந்த கருத்தும் கூறவில்லை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேட்டி
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு எனக்கு எதிராக எந்த கருத்தும் கூறவில்லை என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி பாராளுமன்ற தேர்தலில் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில் வெற்றி பெ
மத்திய மந்திரிசபை விரிவாக்கம் ஒத்திவைப்பு பிரதமர் அமெரிக்கா சென்று திரும்பிய பிறகே நடக்கும்
மத்திய மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் அமெரிக்காவுக்கு சென்று திரும்பிய பிறகே விரிவாக்கம் நடைபெறும் என்று தெரிகிறது. எதிர்பார்ப்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த மே 26–ந் தேதி பதவி ஏற்றது. அப்
டி.கே.பட்டம்மாள் நினைவு தபால் தலை அடுத்த மாதம் வெளியீடு
பாரம்பரிய இசைத்துறையில் சிறந்த பாடகர்களாகவும், இசை வல்லுனர்களாகவும் ஜொலித்த மறைந்த இசை மேதைகளின் நினைவாக தபால் தலை வெளியிட இந்திய தபால் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி கர்நாடக இசை மேதை டி.கே.பட்டம்மாள், சிதார் இசைக்கருவியை உலகுக்கு அறிமுகப்படுத்திய இசை
கல்லூரி மாணவி காதலனுடன் ஓட்டம்? மீட்டு தரக்கோரி பெற்றோர் தர்ணா–பரபரப்பு
கல்லூரி மாணவி காதலனுடன் ஓட்டம்? மீட்டு தரக்கோரி பெற்றோர் தர்ணா–பரபரப்பு
காட்கோபர் ராஜவாடி மருத்துவமனையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட 10 பெண்கள் பாதிப்பு மாநகராட்சி சுகாதாரத்துறை விசாரணை
காட்கோபர் ராஜவாடி மருத்துவமனையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட 10 பெண்கள் பாதிப்பு மாநகராட்சி சுகாதாரத்துறை விசாரணை
தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் நடிகை பூஜாகாந்திக்கு ஜாமீன் கோர்ட்டு உத்தரவு
தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் நடிகை பூஜாகாந்திக்கு ஜாமீன் கோர்ட்டு உத்தரவு
ராமர் கோவிலை மறுசீரமைக்க பிரதமருக்கு சுப்ரமணியன் சாமி கடிதம்
பாரதீய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதியில் அளித்தப்படி 2016-ஆம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோவிலை மீண்டும் மறுசீரமைப்பதற்கான திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கடிதம் எழுதியுள்ளார்.
பேஸ்புக் நண்பரால் இளம்பெண்ணின் திருமணம் நின்றது இருவரும் இணைந்து இருப்பதுபோல் படத்தை சித்தரித்து வெளியிட்டதால் பரபரப்பு
‘பேஸ்புக்’ நண்பரால் இளம்பெண்ணின் திருமணம் நின்றுபோனது. இருவரும் இணைந்து இருப்பதுபோல் படத்தை சித்தரித்து வெளியிட்டதால் இந்த விபரீதம் நடந்து உள்ளது. தற்போது அந்த ‘பேஸ்புக்’ நண்பரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
நதிகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை ஆன்லைனில் கண்காணிக்க மத்திய அரசு திட்டம்
நதிகள் மற்றும் நீர்நிலைகளில் தொழிற்சாலைக்கழிவுகள் கலக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மனித மேற்பார்வைகளை தவிர்த்து ஆன்லைன் மூலம் நேரடியாக உடனுக்குடன் கண்காணிக்க ஆன்லைன் கிரீன் கிளியரன்ஸ் சிஸ்டம் என்ற புதிய யுக்தியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
கோவாவில் மதுவை தடைசெய்யமுடியாது மது கோவா கலாச்சாரத்தின் ஒரு பகுதி பா.ஜ.க. தலைவர்
கேரளாவில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளதாகவும், அடுத்த பத்து ஆண்டுகளில் கேரளா பூரண மதுவிலக்கு பெற்ற மாநிலமாக இருக்கவேண்டும் என்ற இலக்கை அடைவோம்
அரசு பள்ளிக்கு திடீர் 'விசிட்' அடித்த குஜராத் முதல்வர்
குஜராத் முதல்வர் ஆனந்தி படேல் இன்று திடீரென்று அங்குள்ள அரசு பள்ளி ஒன்றிற்கு வருகை தந்தார். குஜராத் காந்திநகரின் செக்டார்-7-ல் உள்ள சர்தார் படேல் வித்தியா மந்திர் அரசு பள்ளிக்கு இன்று காலை திடீரென முதல்வர் ஆனந்தி படேல் அதிகாரிகளுடன் வந்தார். அங்கு அனைத்து பணிகளும் ஒழுங்காக நடைபெறுகிறதா என்பதை பார்வையிட்டார்.
மாணவிகள் விடுதிக்குள் குடிபோதையில் நுழைந்த ஆயுதப்படை போலீஸ்காரர் கைது
சிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா ஆகும்பேயில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள மாணவிகள் விடுதிக்குள் நேற்று இரவு 10 மணியளவில்
பள்ளிக்கு செல்போனை கொண்டுவந்ததால் மாணவியை கண்டித்த பி.டி.ஆசிரியர் அவமானம் தாங்க முடியாமல் மாணவி தற்கொலை
கான்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் பள்ளிக்கு செல்போனை கொண்டு வந்த மாணவியை பி.டி.ஆசிரியர் திட்டியதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழர்களுக்கு நீதி கிடைக்க இலங்கை உறுதி அளிக்க வேண்டும் -பிரதமர் நரேந்திர மோடி
தமிழர்களுக்கு நீதி கிடைக்க இலங்கை உறுதி அளிக்க வேண்டும் -பிரதமர் நரேந்திர மோடி
மோடியின் முதல் மூன்று மாத கால ஆட்சி ஏமாற்றம் அளிக்கிறது: மாயாவதி கருத்து
பிரதமர் நரேந்திர மோடியின் முதல் மூன்று மாத ஆட்சி காலம் ஏமாற்றம் அளிப்பதாக பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் மூன்று மாத ஆட்சி ஏமாற்றம் அளிக்கிறது. மோடி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. மோடி அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாக அறிவித்தது. ஆனால் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி நரேந்திர தோமருக்கு ராஞ்சியில் கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு
கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜார்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் ஒரே மேடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ஹேமந்த் சோரன் பேசுகையில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பட்டது.இந்த நிகழ்வை ஹேமந்த் சோரன் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜார்கண்டில், மத்திய மந்திரி நரேந்திர தோமர் ஏர்போர்ட் வரும் போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து அங்கு பாரதீய ஜனதா கட்சியினருக்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினருக்கும் இடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Friday, August 22, 2014
யூபிஎஸ்சி தேர்வை நிறுத்திவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்கிற யூ.பி.எஸ்.சி மத்திய அரசு பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதில். சி- சாட் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து யூபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள், நாளை நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். நாளை தேர்வு நடைபெற இருந்த நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.
திட்டக்கமிஷனுக்கு பதிலாக 8 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது என தகவல்
திட்டக்கமிஷனுக்கு பதிலாக 8 பேர் கொண்ட சிந்தனை குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதில் மூத்த பொருளாதார நிபுணர்கள், சமூக ஆரவலர், மற்றும் அறிவியல் துறை வல்லுனர் உள்ளிட்டோர் இடம் பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக தற்போதைய சூழலுக்கு தக்கவாறு புதிய அமைப்பு உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடிசுதந்திர தின உரையின் போது அறிவித்து இருந்தார். இதையடுத்து, புதிய குழு அமைப்பது குறித்து பொதுமக்கள் தங்கள் யோசனைகளை தெரிவிக்கலாம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார்.
மங்கள்யான் விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய்கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும்- இஸ்ரோ தகவல்
மங்கள்யான் விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய்கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும்- இஸ்ரோ தகவல்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் இரா.சம்பந்தன், மாவை எஸ்.சேனாதிராஜா, சுரேஷ் பிரேம சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராஜ் மற்றும் செல்வம் அடைக்கல நாதன் ஆகியோர் நேற்று காலை டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.அப்போது இலங்கை தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு கிடைப்பது குறித்தும், 13-வது அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.மேலும், இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை சேர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்தும், இது தொடர்பாக நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அசாம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை: முதல் மந்திரி தருண் கோகாய் தகவல்
அசாமின் கோலாகட் மாவட்டம், நாகாலாந்து எல்லையோரம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்த கிராமவாசிகள் மீது, நாகாலாந்தை சேர்ந்த ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர் இதைத்தொடர்ந்து அந்த மாவட்டத்தின் உரியாம்கட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.
இந்திய எல்லை கட்டுபாட்டு அருகே சுரங்கப்பதை: ராணுவம் கண்டறிந்தது
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து காஷ்மீரில் உள்ள பல்லன்வால் வரை சுமார் 50 மீட்டர் நீளம் வரை உள்ள சுரங்கப்பாதையை இந்திய ராணுவம் கண்டறிந்துள்ளது. இந்த சுரங்கம் 7-8 அடி ஆழத்திலும் 2.5 மீட்டர் அகலத்திலும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய பகுதிக்குள் தீவிர்வாதிகளை நுழைய செய்ய இந்த சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையின் ஒரு முனையை இந்திய ராணுவத்தினர் அழித்தனர்
பேச்சு வார்த்தையை ரத்து செய்ததன் மூலம் மோடி அரசு பாகிஸ்தானுக்கு தகுந்த செய்தி அனுப்பியுள்ளது : அமித் ஷா
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதால், இந்தியா பாகிஸ்தான் இடையிலான வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தையை நடத்த முடியாது என இந்தியா அறிவித்தன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கு மோடி அரசு தகுந்த செய்தி அனுப்பியுள்ளது என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா தெரிவித்தார். தெலுங்கானாவில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அமித் ஷா மேலும் கூறியதாவது: -பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் எப்போதுமே அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால் எந்த அரசுக்குமே அதை தடுத்து நிறுத்தும் தைரியம் இல்லை. நீங்கள் பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பினால் எங்களுடன் பேச்சு வார்த்தை முடியாது என மோடி அரசாங்கம் பாகிஸ்தானுக்கு தகுந்த செய்தி வழங்கியுள்ளது. இதை பாரதீய ஜனதா பிரதமர்தான் செய்தார் என்பதை நான் பெருமையாக கூறுகிறேன்.
பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை என்ற புறக்கணிப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் காங்கிரசுக்கு ராஜ்நாத்சிங் கோரிக்கை
சமீபத்தில் அரியானா மாநிலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அந்த மாநில முதல்–மந்திரி ஹூடா பேசுகையில் எதிர்ப்பு கோஷங்கள் எழுந்ததால், அவர் உரையை பாதியில் முடித்தார். இதேபோல சம்பவங்கள் தொடர்ந்ததால், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை காங்கிரஸ் முதல்–மந்திரிகள் புறக்கணிக்க வேண்டும் என்று கட்சி தலைமை கேட்டுக் கொண்டது.
கென்யாவில் இருந்து திரும்பிய தாய்–குழந்தைக்கு ‘எபோலா’ நோய் பாதிப்பா? மருத்துவ குழுவினர் பரிசோதனை
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கஜேந்தர்ரெட்டி (வயது 29). இவர் கென்யாவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்தார். இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கஜேந்தர் ரெட்டி மரணம் அடைந்தார்.கென்யாவில் தற்போது ‘எபோலா’ என்ற கொடியநோய் பரவி வருகிறது. இந்த நிலையில் கஜேந்தர் ரெட்டியின் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரான ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பூதலப்பட்டு கிராமத்திற்கு வந்தனர்.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய தரப்பில் இருந்தும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள 22 இந்திய ராணுவ முகாம்களில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் ஒரு குழந்தைஉட்பட 2 பேர் பலியாகினர். பலியாகியுள்ளது. மேலும் ஜவான் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர்.
மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவுடன் சிவசேனா எம்.பி. சந்திப்பு “தாராவி பகுதி மக்களுக்கு 400 சதுர அடியில் வீடு வழங்கவேண்டும்”
மும்பையில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவை சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே தலைமையிலான குழுவினர் சந்தித்து, தாராவி பகுதி மக்களுக்கு 400 சதுர அடியில் வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அஞ்சான் படத்துக்கு சான்றிதழ் வழங்க மடிக்கணினி, ஐ–பேடு பரிசு சினிமா தணிக்கை வாரிய தலைவர் வாங்கியதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல்
அஞ்சான் படத்துக்கு சான்றிதழ் வழங்க மடிக்கணினி மற்றும் ஐ–பேடு ஆகியவற்றை மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ் குமார் பரிசாக வாங்கி இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் சிறப்பு கோர்ட்டில் தெரிவித்தனர். கைது இந்திய சினிமா படங்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் வ
எதிர்க்கட்சி தலைவர் பதவி: எங்கள் கருத்தை சுப்ரீம் கோர்ட்டு பிரதிபலித்து இருக்கிறது காங்கிரஸ் கருத்து
எதிர்க்கட்சி தலைவர் பதவி விவகாரம் குறித்த எங்கள் கருத்தை சுப்ரீம் கோர்ட்டு பிரதிபலித்து இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கருத்து பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க முடியாது என சபாநாயகர் சுமி
காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்குமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் 9–ந் தேதி வரை ‘கெடு’
எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து செப்டம்பர் 9–ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு’ விதித்து உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவி கடந்த மே மாதம் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 182 இடங்களில் வெற்றி
‘பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பான சாதனங்களை உருவாக்குங்கள்’ இந்திய தொழில்நுட்ப கழகங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை தொடர்பான சாதனங்களை உருவாக்குமாறு இந்திய தொழில்நுட்ப கழகங்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டு உள்ளார். ஐ.ஐ.டி. மாநாடு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்திய தொழில்நுட்ப கழக (ஐ.ஐ.டி) தலைவர்கள், டைரக்டர்கள் கலந்து
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்; ஒருவர் காயம்
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ராணுவ எல்லைச்சாவடிகள் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தினந்தோறும் நடத்தி வரும் தாக்குதல்களால் எல்லையில் பதற்றம் அ
சில வரி செய்திகள்
குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது விதியை மீறியதாக பாரதீய ஜனதா பிரதம வேட்பாளரான நரேந்திரமோடி மீது தேர்தல் கமிஷன் தொடர்ந்த வழக்கிற்கு, மாநில போலீசார் கோர்ட்டில் அளித்த பதில் மனுவில்
ஓட்டுப்போட்டவர்களின் ரகசியம் காக்கும் திட்டம் அமல் எப்போது? தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
‘ஓட்டுப்போட்டவர்களின் ரகசியம் காக்கும் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும்’ என்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் கூறினார்.
பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை என்ற புறக்கணிப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் காங்கிரசுக்கு ராஜ்நாத்சிங் கோரிக்கை
சமீபத்தில் அரியானா மாநிலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அந்த மாநில முதல்–மந்திரி ஹூடா பேசுகையில் எதிர்ப்பு கோஷங்கள் எழுந்ததால், அவர் உரையை பாதியில் முடித்தார். இதேபோல சம்பவங்கள் தொடர்ந்ததால், பிரதமர் பங்கே
உத்தரகாண்ட் மாநில ‘கவர்னரை நீக்கும் திட்டம் இல்லை’ ராஜ்நாத்சிங் தகவல்
உத்தரகாண்ட் மாநில கவர்னர் பதவியில் இருந்து அசிஸ் குரேஷியை நீக்கும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார். கவர்னர்கள் மாற்றம் மத்தியில் பாரதீய ஜனதா கட்சி அரசு அமைந்தபின், மாநிலங்களில் முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட கவ
இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தல்
வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் நேற்று சந்தித்து பேசினர். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின்
முஸ்லிம் ஊழியருக்கு உணவு ஊட்டிய விவகாரம் சிவசேனா எம்.பி.க்கள் 11 பேரை தகுதி நீக்க கோரிய மனு தள்ளுபடி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
ரம்ஜான் நோன்பு இருந்த முஸ்லிம் ஊழியருக்கு வலுக்கட்டாயமாக உணவு ஊட்டிய பிரச்சினையில் சிவசேனா எம்.பி.க்கள் 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை டெல்லி ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சிவசேனா எம்.பி. உணவு ஊட்டிய விவகாரம
டெல்லி கற்பழிப்பு தொடர்பான கருத்துக்கு அருண் ஜெட்லி வருத்தம் தெரிவித்தார்
டெல்லி கற்பழிப்பு தொடர்பாக வெளியான சர்ச்சைக்குரிய கருத்துக்கு மத்திய மந்திரி அருண் ஜெட்லி வருத்தம் தெரிவித்தார். சுற்றுலா மந்திரிகளின் மாநாடு தலைநகர் டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி மருத்துவக்கல்லூரி (பிசியோதெரபி) மாணவி ஒருவர், ஓடும்
விடுதலை செய்யப்பட்ட சமூக சேவகி இரோம் சர்மிளா மீண்டும் கைது உண்ணாவிரதத்தை தொடங்கியதால் நடவடிக்கை
பல ஆண்டுகள் சிறைவாசத்துக்குப்பின் விடுதலை செய்யப்பட்ட சமூக சேவகி இரோம் சர்மிளா நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார். சாகும் வரை உண்ணாவிரதம் மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே உள்ள மலோம் கிராமத்தில் கடந்த 2000–ம் ஆண்டு நடந்த என்கவுண்டரில், 10 பேரை ஆயுதப்படை
சிவில் சர்வீசஸ் தேர்வில் பார்வையற்றோருக்கு கூடுதல் நேரம் யு.பி.எஸ்.சி. அறிவிப்பு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில், முதல் நிலை தேர்வுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் தலா 200 மதிப்பெண் கொண்ட 2 கட்டாய தாள்கள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு தேர்வுக்கும் தலா 2 மணி நேரம் வழங்கப்படுகிறது
Subscribe to:
Posts (Atom)