Thursday, August 28, 2014

கோவை அருகே ரூ.15 கோடி பணம் இருந்த வேன் கவிழ்ந்து விபத்து

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையில் இருந்து ரூ.15 கோடி பணம் 6 பெட்டிகளில் ஏற்றப்பட்டு கேரள மாநிலம் திருச்சூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வங்கி அதிகாரி பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள், மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் வேனில் இருந்தனர். மதுக்கரை பாஸ்ரோடு, பாலத்துறை அருகே சென்றபோது, பாலக்காட்டில் இருந்து வந்த கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை திருப்பினார். அப்போது அந்த காரில் மோதியபடி வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேன் டிரைவர் லேசான காயம் அடைந்தார்.


No comments:

Post a Comment