Friday, August 29, 2014

ஐகோர்ட்டு விசாரணை குழுவுக்கு தடை; பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்சு நீதிபதியாக பதவி வகித்த பெண் ஒருவர், அந்த மாநில ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி ஒருவர் மீது செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தன்னை அந்த நீதிபதி வீட்டுக்கு தனிமையில் வந்து, குத்து பாடலுக்கு நடனம் ஆடச் சொல்லி பாலியல் தொல்லை தந்ததாக குற்றம் சாட்டினார். தான் அப்படி நடந்து கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் தன்னை கொள்ளையர்களின் ராஜ்யம் என்று சொல்லப்படக்கூடிய ‘சிதி’ என்ற இடத்துக்கு இடமாற்றம் செய்ததாகவும் கூறினார். இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.


No comments:

Post a Comment