ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்த நாளான ஆகஸ்ட் 27-ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. 2007ம் ஆண்டு இணைக்கப்பட்டது. இதையொட்டி ஏர் இந்தியா விமான நிறுவனம் இன்று முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் ரூ 100-க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது. ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 5 நாட்கள் சலுகை டிக்கெட் விற்பனை செய்யப்படும். டிக்கெட்களை ஏர் இந்தியா இணையதளம் மூலமாக மட்டுமே பெற முடியும். என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை முதல் பணிகள் இணையதளத்திற்கு படையெடுத்தனர். முன்னெப்போதும் இல்லாதவாறு இணைய தளத்திற்கு மக்கள் வந்தால் இணையதளம் முடங்கியுள்ளது.
No comments:
Post a Comment