Thursday, August 28, 2014

காட்கோபரில் துணிகரம் தனியார் வங்கியில் புகுந்து ரூ.54 லட்சம் கொள்ளை மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு

காட்கோபரில், தனியார் வங்கியில் புகுந்து கள்ளச்சாவி மூலம் பெட்டகத்தை திறந்து ரூ.54 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மும்பை காட்கோபர் மேற்கு பகுதியில் ஒரு தனியார் வங்கி உள்ளது. சம்பவத்தன்று வங்கி ஊழியர் ஒருவர் பரிவர்த்தனை தேவைக்காக பணம் எடுப்பதற்காக வங்கி ரகசிய அறையில் உள்ள பணப்பெட்டகத்தை திறந்தார். அப்போது, அதில் பணம் ஏதும் இல்லை. அதில் இருந்த ரூ.54 லட்சம் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி வங்கி மேலாளர் மற்றும் காசாளரிடம் தெரிவித்தார். இதனால் பதறிப்போன அவர்கள் சம்பவம் குறித்து காட்கோபர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்


No comments:

Post a Comment