டெல்லியில் கடந்த மே மாதம் சந்திரா மோகன் சர்மா கொலை செய்யப்பட்டார். ஆனால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சந்திரா மோகன் சர்மா கடந்த மே மாதம் 1ம் தேதி அப்பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒருவரை கொலை செய்துள்ளார். பின்னர் தன்னுடைய காரில் முன் இருக்கையில் வைத்துள்ளார். பின்னர் தன்னுடைய உடல் என எல்லோருக்கும் அடையாளம் தெரிய சில வேலைகளை செய்துவிட்டு காருக்கு தீ வைத்துள்ளார். பின்னர் பெங்களூர் சென்று மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்துள்ளார். என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment