எபோலா பாதித்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் 44 ஆயிரத்து 700 இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் ஏராளமானோர் படிப்படியாக தாயகம் திரும்பி வருகிறார்கள். நேற்று 3 வெவ்வேறு விமானங்கள் மூலம் மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையம் வழியாக லைபீரியா மற்றும் நைஜீரியா நாடுகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தனர். இவர்கள் அனைவரும் தீவிர முன்னெச்சரிக்கை பரிசோதனைக்கும், கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்டு எபோலா நோயின் தாக்கம் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment