குவைத்தில் இந்திய தொழிலாளர்களுக்கும். எகிப்து தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 எகிப்தியர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 25 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் காயம் அடைந்த இந்தியர்கள் 15 பேர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலை அடுத்து இந்திய தொழிலாளர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
No comments:
Post a Comment