மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில டைமண்ட் ஹார்பர் சட்டமன்றத் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீபக் ஹல்டார் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் “பாலியல் பலாத்காரம் முந்தைய காலத்தில் இருந்துள்ளது. தற்போதும் உள்ளது. பூமி இருக்கும் வரையில், பாலியல் பலாத்காரமும் இருக்கும்”. என்றார். தீபக்கின் இந்த பேச்சு விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் மம்தாவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment