உத்தரபிரதேச மாநிலத்தில் 12 சட்டமன்றத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று அக்கட்சியின் மாயாவதி முன்னதாகவே அறிவித்துவிட்டார். இதனால் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாடி மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் அமோக வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனையை அக்கட்சி கையில் எடுக்க உள்ளது.
No comments:
Post a Comment