Thursday, August 28, 2014

டெல்லியில் அரசு அமைப்பு; மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எந்த அறிக்கையும் அனுப்பவில்லை - நஜீப் ஜங்

டெல்லியில் அரசு அமைப்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் நஜீப் ஜங் அனுப்பினார் என்பது தொடர்பான மீடியா தகவல்களை அவர் மறுத்துள்ளார். இது தொர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் இதுவரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் யாருக்கும் எந்த ஒரு அறிக்கையும் அளிக்கவில்லை. என்று கூறினார். டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு எப்பொதும் இருக்கிறது. என்று அவர் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நிர்வாக பொறுப்புகளை அம்மாநில கவர்னர் நஜீப் ஜங் கவனித்து வருகிறார்.


No comments:

Post a Comment