மேகலாயாவின் துரா பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் ஒன்று ஷில்லாங் நோக்கி சென்றது. பஸ் துராவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் செல்லும் போது நிலைதடுமாறி விபத்துக்குள் சிக்கியது. பஸ் மலையில் இருந்து பள்ளத்திற்குள் விழுந்தது. இந்த விபத்து இரவு 12:30 மணி அளவில் நடைபெற்றுள்ளது. உடனடியாக தகவல் அறிந்த மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும், 32 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் துரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் கவுகாத்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment