Friday, August 29, 2014

எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி உள்துறை எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்து வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவலை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து வருகின்றனர். தீரவாதிகள் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் அருகேயே முகாம் அமைத்து தங்கியுள்ளனர். இதனையடுத்து எல்லையில் இந்திய ராணுவத்தினர் விழிப்புடன் உள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர். என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் எல்லையில் 15 சந்தேகத்திற்கு இடமான பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர் என்று எச்சரித்து எல்லையோர மாவட்டங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே தீவிரவாதி ஹபீஸ் சையத் எல்லையில் நடமாடுவதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment