டெல்லியை சேர்ந்த பன்சால் என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி டெல்லியில் இருந்து கேரளா மாநிலம் ஏர்ணாகுளத்திற்கு வந்தார். அவர் ரெயிலில் வந்தபோது அவரது ஆடைகள் இருந்த பைகளை ரெயிலில் இருந்த எலிகள் கடித்து குதறியது. அவரது துணிகளை எலிகள் துண்டு துண்டாக வெட்டியுள்ளது. இதனை பார்த்த பன்சால் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். ஓடும் ரெயிலில் எலிகள் செய்த அட்டகாசத்தால் அவரது துணிகள் எல்லாம் கிழிந்துவிட்டன. இதனையடுத்து பன்சால் ரெயில்வே கவனக்குறைவு தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி புதுடெல்லி நுகர்வோர் (பூசல்கள்) குறை தீர்ப்பாணையத்தைய் நாடினார். மேலும், என்னுடைய பொருட்கள் சேதம் அடைந்ததற்கு ரூ. 18, 400 நஷ்ட ஈடாக ரெயில்வேயிடம் பெற்று தரவேண்டும் என்று கேட்டு கொண்டார்.
No comments:
Post a Comment