ராஜஸ்தான் மாநிலம் போக்ரான் அருகே உள்ள பாபா ராம்தேவ் சன்னதிக்கு, உதைபூரை சேர்ந்த பக்தர்கள் பஸ்சில் வந்துள்ளனர். அவர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு, தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்களது பஸ், பாலி- உதைபூர் சாலையில் காலை 6 மணிக்கு மணிடா கிராமத்தை கடந்தது. அப்போது எதிரே வந்த டிராக்டர் பஸ் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் 6 பக்தர்கள் சம்பவ இடத்திலே பலியாகினர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும், வழியிலே காயம் அடைந்த 4 பேர் பலியாகினர். மேலும், காயம் அடைந்த 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடத்ததை அடுத்து டிராக்டர் ஓட்டி வந்தவரை காணவில்லை.
No comments:
Post a Comment