Tuesday, August 26, 2014

அசாமில் தீவிரவாதிகள் அட்டூழியம்; 16 வயது சிறுமியை வீட்டிலிருந்து வெளியே இழுத்து சுட்டுக் கொன்றனர்

இந்தியா-பூடான் எல்லையில் உள்ள திவிமக்ரி என்ற கிராமத்தில் 16 வயது சிறுமியை கடந்த 20ம் தேதி தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படைக்கு சிறுமி தகவல் தெரிவித்ததாக குற்றம் சாட்டி சிறுமியை தீவிரவாதிகள் அவரது பெற்றோர் முன்னிலையில் 9 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். சிறுமி பொதுமக்கன் கண் எதிரே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததார். முன்னதாக சிறுமியை தீவிரவாதிகள் கொடுமையாக தாக்கியுள்ளனர். சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கிறது. என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment