குற்றப்பின்னணி கொண்டவர்களை மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும் என்று மனோஞ் நரூலா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2004ம் ஆண்டு மனுதாக்கல் செய்தார். அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மந்திரியாக பதவி வகித்த லல்லு பிரசாத் யாதவ், முகமது தஸ்லிமுதீன், ஜெய் பிரகாஷ் யாதவ் ஆகியோரை மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த மனு தள்ளுபடி அப்போது செய்யப்பட்டது. பின்னர் நாட்டின் 5 மூத்த நீதிபதிகளின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment