Monday, August 25, 2014

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்த பின்புதான் நடவடிக்கை: மத்திய அரசு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை அளித்த பின்புதான் மத்திய அரசு தனது இறுதி முடிவை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் இதனால் அரசுக்கு 1.83 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.


No comments:

Post a Comment