Monday, August 25, 2014

இந்தி பட தயாரிப்பாளர் அலி மொரானி வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு

மும்பை ஜுஹு பகுதியில் உள்ள பிரபல இந்தி பட தயாரிப்பாளர் அலி மொரானியின் இல்லத்தை நோக்கி இரு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடி விட்டனர். கடந்த சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. மொரானியின் இல்லத்தை நோக்கி அடையாளம் தெரியாத இரு நபர்கள் 5 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாபியா கும்பல் தலைவன் ரவி பூஜாரியிடம் இருந்து மொரானிக்கு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஜுஹ§ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொரானி சகோதரர்கள் (அலி மற்றும் கரீம்) ராஜா ஹிந்துஸ்தானி, டாமினி, துஷ்மனி, ஹம்கோ தும்சே பியார் ஹை உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளனர்.


No comments:

Post a Comment