புதுடெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள கினாரி பஜாரில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதிக்கு 25 தீ அணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது வரை எந்த இறப்புமோ காயங்களோ யாருக்கும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட இடம் மிகவும் குறுகிய சந்தாக இருப்பாதல் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மின்மாற்றியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment