Sunday, August 24, 2014

பீகாரில் வாக்கு எண்ணிக்கை பாரதீய ஜனதா முன்னிலை; லாலு பிரசாத்திற்கு உடல்நலம் பாதிப்பு

பீகார் சட்டசபையில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஆளும் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாரத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பீகாரில் அடுத்ததாக நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு இது அரையிறுதி தேர்தலாக கருதப்படுகிறது. இதில் பாரதீய ஜனதா கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாரதீய ஜனதா, ஜாலே, மொகானியா, ராஜ்நகர், நார்காதியகாஞ்ம் விஜயராகவ்கார் ஆகிய 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி முகைதீன்நகர் சட்டமன்றத் தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே லாலு பிரசாத்திற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.


No comments:

Post a Comment