மத்திய பிரதேசம் மாநிலம் சாட்னா மாவட்டத்தில் உள்ள சித்திரக்கூட் காம்நாத் கோவிலில் இன்று அதிகாலை கூட்டநெரிசல் ஏற்பட்டது. அமாவாசையை யொட்டி கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் முந்தியடித்து ஓடியபோது நெரிசல் ஏற்பட்டது. என்று கூறப்படுகிறது. காலை 6 மணிக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை உயரக் கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment