காஷ்மீர் எல்லையில் கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள், தற்போது குடியிருப்பு பகுதிகளை நோக்கியும் திரும்பியுள்ளதால், எல்லைப்பகுதி மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எல்லையோர கிராமவாசிகள் வெளியேறி வருகின்றனர். தொடர்ந்து இந்திய நிலைகள் மீது தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வருகிறது. காஷ்மீரில் 35 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளது.
No comments:
Post a Comment