Sunday, August 24, 2014

சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை

தென்மேற்கு பருவமழை கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. சென்னையை பொருத்தமட்டில் நேற்று காலையில் வானம் தெளிவாக காணப்பட்டது. இரவு சுமார் 11.15 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், வேப்பேரி, ராயப்பேட்டை, அசோக் நகர், அடையாறு, வடபழனி, கோயம்பேடு, நுங்கம்பாக்கம், தியாகராயநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.


No comments:

Post a Comment