Tuesday, August 26, 2014

எல்லையில் பாகிஸ்தான் நிலைகள் அருகே தீவிரவாதிகள் முகாம்; கிராமங்களை குறிவைக்கிறது பாக். ராணுவம்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும், இதனை மீறி இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்றும் காஷ்மீர் எல்லைபகுதிக்குள் தாக்குதல் நடத்தியது. அப்போது 40 இந்திய நிலைகள், 24 கிராமங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே உள்ளது. இதற்கிடையே எல்லைப்பகுதியில் இருந்து குக்கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர்.


No comments:

Post a Comment