இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ‘இந்தியன் முஜாகிதீன்’ தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் டெல்லியின் புறநகர் பகுதியான நங்லோய் அருகே மீர் விகார் பகுதியில் சட்ட விரோதமாக ஆயுத தொழிற்சாலை நடத்தி வந்தது கடந்த 2011–ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தொழிற்சாலையை கைப்பற்றி அழித்த சிறப்பு பிரிவு போலீசார், இது தொடர்பாக சில தீவிரவாதிகளையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தீவிரவாதிகளை போலீசார் தேடி வந்தனர்.
No comments:
Post a Comment