இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் இந்திய துணை கேப்டன் விராட் கோலி தனது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவை அழைத்துச் சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெஸ்ட் தொடரில் அவர் சொதப்பியதால் காதலியுடன் சுற்றியதே காரணம் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புகார்கள் சென்றுள்ளன. இந்திய அணியின் மேலாளர் சுனில்தேவ் கூறுகையில், ‘கோலி, அனுஷ்கா ஷர்மாவுடன் தங்கியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் காதலியை அழைத்து வந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பெண் தோழிகளை (காதலி) அழைத்துச் செல்வது நமது கலாசாரத்திற்கு எதிரானது. இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அறிக்கை அளிப்பேன்’ என்றார்.
No comments:
Post a Comment