ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் பழமையான ஜெய்பூர் அரண்மனையில் காலை தீ விபத்து ஏற்பட்டது. மியூசிய அலுவலக அறையில் பெரும் புகையுடன் தீ பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் 12 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பெரும் போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் யாரும் காயம் அடையவில்லை. முபாரக் மகாலில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. தீ விபத்தில் அரண்மனையில் இருந்த விலை உயர்ந்த கலை பொருட்கள் எரிந்து சாம்பலாயின என தகவல்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அரண்மனையின் ஒரு பகுதி மியூசியமாக செயல்பட்டு வருகிறது. அதன்அருகில் உள்ள பகுதியில் மன்னர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment