Sunday, August 24, 2014

25 இந்திய நிலைகள், 19 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கி சூடு; கிராம மக்கள் வெளியேற்றம்

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தந்தையும், மகனும் பலியானார்கள். படை வீரர் ஒருவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து நேற்று இரவும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு 25 இந்திய நிலைகள், 19 குக்கிராமங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையில் ஆர்.எஸ்.புரா மற்றும் அர்னியா பகுதியில் 25 இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. 19 குக்கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மோர்ட்டார் ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி எந்திர துப்பாக்கிகள் மூலமும் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. நேற்று இரவு 10.30 மணி அளவில் தொடங்கிய இந்த தாக்குதல் காலை 7:30 மணி வரை நீடித்தது. என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment