Sunday, August 24, 2014

மும்பையில் பட்டப்பகலில் பயங்கரம் தமிழ் வாலிபரை கடத்தி குத்திக்கொலை காரில் வந்து உடலை வீசிச்சென்ற மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

மும்பை வில்லேபார்லேயில் தமிழர்கள் அதிகமாக வசித்து வரும் குடிசைப்பகுதியான நேருநகரில் சராசராம் தெருவில் வசித்து வரும் ராமனின் மகன் மாரியப்பன் என்ற மாரி (வயது38). இவர் மனைவி உமாமகேஷ்வரி மற்றும் 2 குழந்தையுடன் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகும். இந்நிலையில் மாரியப்பன் நேற்று தனது மனைவி, குழந்தையுடன் வீட்டில் அமர்ந்து டி.வி பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு செல்போனில் அழைப்பு வந்ததால் மனைவியிடம் கூறி விட்டு வெளியே சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது மனைவி உறவினர்களிடம் தெரிவித்தார். இதனை அடுத்து உறவினர்கள் மாரியப்பனை பல இடங்களில் தேடிவந்தனர்.


No comments:

Post a Comment