Sunday, August 24, 2014

மிசோரம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்தால் ராஜினாமா செய்வேன் - மராட்டிய கவர்னர் சங்கர நாராயணன்

இந்நிலையில் மராட்டிய மாநில கவர்னர் சங்கர நாராயணன் மிசோரம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மராட்டிய கவர்னராக உள்ள சங்கர நாராயணன் பதவி காலம் வருகிற 2017 ஆண்டுடன் முடிவு அடைகிறது. இந்நிலையில் அவர் மிசோரம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில கவனராக இருந்த கமலா பேனிவால் மிசோரம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர் கமலா பேனிவால் ஜனாதிபதி உத்தரவின் அடிப்படையில் நீக்கப்பட்டார். இதனையடுத்து அங்கு கவர்னர் பதவி காலியாக இருந்தது. தற்போது அவ்விடத்திற்கு சங்கர நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். மராட்டிய மாநில கவர்னர் பதவியை கூடுதல் பொறுப்பாக குஜராத் கவர்னர் ஒ.பி. கோக்லி கவனித்து கொள்வார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment