Monday, August 25, 2014

புதிய விசாரணை குழு அமைக்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி கோரிக்கை

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு 1–ந் தேதி முதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெண் நீதிபதி ஒருவர், 2012 அக்டோபர் முதல் மாவட்ட கூடுதல் மற்றும் செசன்சு நீதிபதியாக பதவி வகித்து வந்தார். விசாகா கமிட்டி தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வந்த இவர், கடந்த மாதம் 15–ந் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவரின் இந்த திடீர் முடிவுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் ‘செக்ஸ்’ தொல்லையே காரணம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பெண் நீதிபதி, ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மத்திய சட்ட மந்திரி உள்ளிட்டோருக்கு 9 பக்க புகார் கடிதம் எழுதினார்.


No comments:

Post a Comment