‘எபோலா வைரஸ்’ நோய் பாதித்த லைபீரியா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு 112 இந்திய பயணிகள் வருவார்கள் என்று கூறப்பட்டது. இவர்கள் பல்வேறு விமானங்களில் வருகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், டெல்லி விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்திற்கு ‘எபோலா வைரஸ்’ பாதிக்கப்பட்ட லைபீரியா நாட்டில் இருந்து வந்த 6 இந்திய பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. விமானம் ஓரம் கட்டப்பட்டு மருத்துவ குழுவினர் விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. வைரஸ் அறிகுறி இருந்தால் அந்த பணிகள் தனிமை படுத்தப்பட்டு கூடுதல் சோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
No comments:
Post a Comment