மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றதும் முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்கள் பதவி விலகுவதற்கு நெருக்கடி அளித்ததாகக் கூறப்பட்டது. கோவா கவர்னர் பி.வி.வான்ச்சூ, உத்தரபிரதேச கவர்னர் பி.எல்.ஜோஷி, மேற்கு வங்காள கவர்னர் எம்.கே.நாராயணன், சத்தீஷ்கார் கவர்னர் சேகர் தத் ஆகியோர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் தங்கள் பதவிகளில் இருந்து விலகினார்கள். மிசோரம் கவர்னர் கமலா பேனிவால் ஜனாதிபதி உத்தரவின் அடிப்படையில் நீக்கப்பட்டார். மராட்டிய கவர்னர் கே.சங்கர நாராயணனையும் மத்திய அரசு பதவி விலக அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.
No comments:
Post a Comment