இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் 2003–ம் ஆண்டு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நமது ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் கிராமங்களை நோக்கியும் தாக்குதல் நடத்துவது அண்மையில் வாடிக்கையாகிவிட்டது.சிறிய மோர்ட்டார் ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசியும், தானியங்கி எந்திர துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 18 முறை பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் பாகிஸ்தான் தனது வாலாட்டத்தை நிறுத்திக்கொண்ட மாதிரி தெரியவில்லை.
No comments:
Post a Comment