இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் 2003–ம் ஆண்டு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நமது ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் கிராமங்களை நோக்கியும் தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லை நிலவரம் குறித்து ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் படையின் இயக்குநர் டி.கே. பாட்நாயக்குடன் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டி.கே. பாட்நாயக் சர்வதேச எல்லையில் நிலவும் சூழ்நிலை, ஜம்முவில் கிராமங்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கி சூடு போன்ற பிரச்சனைகளை ராஜ்நாத் சிங்கிடம் விளக்கியுள்ளார். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் உயர் எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பாட்நாயக் குறிப்பிட்டுள்ளார். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment