ஜம்மு காஷ்மீர் மாநிலம் குபுவாரா மாவட்டம் கெரான் பகுதியில், ராணுவம் விடுத்த தகவலின்படி பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று இரவு ராணுவ வீரர்கள் சோதனையில் ஈடுபட்டபோது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு ராணுவமும் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் ராகுல் குமார் என்ற ராணுவ வீரர் காயம் அடைந்தார். காயம் அடைந்த அவர் உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியாகினார். தொடர்ந்து சம்பவ இடத்தில் தீவிரவாதிகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment