Sunday, August 24, 2014

பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் போதுமான பதிலடி கொடுத்து வருகிறது - அருண் ஜெட்லி

மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் மேலாண்மை வளர்ச்சி மையம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை மந்திரி அருண் ஜெட்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் “நேற்று எதனை கூறினேனோ, அதனை இன்றும் கூறுகிறேன். கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. சர்வதேச எல்லையில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் நமது எல்லைகளையும், மக்களையும் முழுமையாக பாதுகாத்து வருகின்றனர். அத்துமீறும் பாகிஸ்தானுக்கு தேவைபடும் அனைத்து பதிலடிகளையும் இந்திய ராணுவம் கொடுத்து வருகிறது.” என்று கூறினார்.


No comments:

Post a Comment