Friday, August 22, 2014

திட்டக்கமிஷனுக்கு பதிலாக 8 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது என தகவல்

திட்டக்கமிஷனுக்கு பதிலாக 8 பேர் கொண்ட சிந்தனை குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதில் மூத்த பொருளாதார நிபுணர்கள், சமூக ஆரவலர், மற்றும் அறிவியல் துறை வல்லுனர் உள்ளிட்டோர் இடம் பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக தற்போதைய சூழலுக்கு தக்கவாறு புதிய அமைப்பு உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடிசுதந்திர தின உரையின் போது அறிவித்து இருந்தார். இதையடுத்து, புதிய குழு அமைப்பது குறித்து பொதுமக்கள் தங்கள் யோசனைகளை தெரிவிக்கலாம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார்.


No comments:

Post a Comment