இதைத்தொடர்ந்து மேற்கு வங்காள கவர்னர் எம்.கே.நாராயணன், நாகாலாந்து கவர்னர் அஸ்வினிகுமார், உத்தரபிரதேச கவர்னர் பி.எல்.ஜோஷி, சத்தீஷ்கார் கவர்னர் சேகர்தத் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். கடந்த மாதம் புதுச்சேரி கவர்னர் வீரேந்திர கட்டாரியாவை முறைகேடு புகாரின்பேரில் மத்திய அரசு பதவி நீக்கம் செய்தது. இதேபோல் குஜராத் மாநிலத்தில் இருந்து மாற்றப்பட்டு மிசோரம் கவர்னராக நியமிக்கப்பட்ட 87 வயது கமலாபெனிவால், குஜ்ராத் மாநில கவர்னராக இருந்தபோது அதிகார துஷ்யபிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அவர் இந்த மாத தொடக்கத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், மராட்டிய கவர்னர் சங்கரநாராயணன் மிசோரம் மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். மிசோரம் மாநிலத்துக்கு செல்ல விரும்பாத சங்கரநாராயணன் நேற்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
No comments:
Post a Comment