நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்வதில் நடந்த முறைகேடுகள் காரணமாக அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவித்திருந்தார்.இதனை அடிப்படையாகக் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கு விசாரணையை கண்காணித்து வந்தது. இதில் பெரும்பான்மையான முறைகேடுகள் 2006–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை நடைபெற்ற சுரங்க ஒதுக்கீடுகளில் தான் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தான் நிலக்கரி துறைக்கும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் சி.பி.ஐ. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் இருந்து நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் குறித்து விசாரணையை விரிவுபடுத்தியது.
No comments:
Post a Comment