Monday, August 25, 2014

கைகலப்பில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கைது

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் சண்டிகாரில் உள்ள பஞ்குலாவிற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கடந்த சனிக்கிழமை இரவு வந்துள்ளார். அப்போது காரை பார்கிங் செய்வது தொடர்பாக அண்டைய வீட்டாருடன் அவருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. யோகராஜ் சிங் கைகலப்பில் ஈடுப்பட்டுள்ளார். மேலும், மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் யோகராஜ் சிங் மற்றும் சிலர் எங்களை தாக்கினர் என்று போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக விசாரித்த போலீசார் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங்கை கைது செய்தனர். மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment