Monday, August 25, 2014

நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவுக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது

சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் ‘கொலிஜியம்’ முறையை ஒழித்து விட்டு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் மூலம் நீதிபதிகளை நியமிக்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, தற்போதுள்ள கொலிஜியம் முறை மூலம் நீதிபதிகளை நியமிக்கும் முறைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார். சுதந்திர தின விழாவில் அவர் பேசுகையில், நிர்வாகம், பாராளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்றும் ஒன்றின் அதிகாரத்தில் மற்றொன்று தலையிடக்கூடாது என்று குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment