தென் ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா வைரஸ்’ நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ‘எபோலா வைரஸ்’ நோய் பாதித்த லைபீரியா நாட்டில் இருந்து மும்பைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) 112 இந்திய பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் பல்வேறு விமானங்களில் வருகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
No comments:
Post a Comment