Monday, August 25, 2014

ஆதார் அட்டை பெற முடியவில்லை என்று 11 வயது சிறுவன் தற்கொலை

விசாகப்பட்டணம் மாவட்டம் திகுவா கோலாபுட் கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் பாலகிருஷ்ணன். சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 வகுப்பு படித்து வந்துள்ளான். அரசு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையை அவனது கணக்கில் இணைக்க ஆதார் அடையாள அட்டையை சிறுவனிடம் பள்ளி ஆசிரியர் கேட்டுள்ளார். அரகு மற்றும் விசாகப்பட்டணம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் சிறுவனால் ஆதார் அடையாள அட்டை பெற முடியவில்லை. சிறுவனின் கையில் மூன்று விரல்கள் ஒன்றாக சேர்ந்து இருந்ததால் அவரது விரல் கேரகை டிஜிட்டலில் பதிவு செய்யப்படவில்லை. ஆதார் அடையாள அட்டை பதிவாளர்கள் சிறுவனுக்கு அட்டை வழங்க மறுத்துள்ளனர். என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment