ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள லைபீரியா, நைஜீரியா, மாலி, கின்யா, உள்பட 6 நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நாடுகளில் இக்கொடிய நோய்க்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோய் தற்போது உலகையே மிரட்டி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். ஐ.நா. அமைதிப்படையில் அங்கம் வகிக்கும் ஏராளமான இந்திய ராணுவ வீரர்களும் அங்கு பணிபுரிந்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment