Monday, August 25, 2014

அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி, 28–ந் தேதி தொடங்கி வைக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா’ (பிரதமர் மக்கள்–நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டது. இத்திட்டத்தை 28–ந் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அதே நாளில் இத்திட்டம் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்படும். மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிகளில், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு தொடங்கி வைப்பார்கள். மேலும், அனைவருக்கும் வங்கி கணக்கு அளிப்பதற்காக, கிளைகள் தோறும் வங்கிகள் சார்பில் முகாம்கள் நடத்தப்படும்.


No comments:

Post a Comment