மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள சித்ரகூட் நகரில் காம்தநாத் பகத் மலைக்கோவில் உள்ளது. சோம்வதி அமாவாசையையட்டி அதிகாலை முதலே இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர். மேலும் பெண்கள் உள்பட ஏராளமானோர் மலையை சுற்றி அங்கபிரதட்சணமும் செய்து கொண்டிருந்தனர். நேரம் செல்லச்செல்ல கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், அவர்கள் ஒருவரையருவர் முந்தி செல்ல முயன்றனர். இதனால் அங்கு திடீரென நெரிசல் ஏற்பட்டது.
No comments:
Post a Comment