கன்னாட் பகுதியில் உள்ள ராமா கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 8 மணியளவில் கட்டிடத்தில் இருந்து புகை வெளியேறியதை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டபோது கட்டத்தில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது தெரியவில்லை. தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.
No comments:
Post a Comment