பீகார் மாநிலத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கும், கர்நாடகம், மத்திய பிரதேசத்தில் மாநிலங்களில் தலா 3 தொகுதிகளுக்கும், பஞ்சாப் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 21- ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம், தல்வண்டி சபோ மற்றும் பாட்டியாலா தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. பாட்டியாலா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரனீத் கவுர் வெற்றி பெற்றுள்ளார். பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரியான அமரீந்தர் சிங்கின் மனைவியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரனீத் கவுர் 23,282 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான சிரோமணி அகாலி தளம் கட்சியி வேட்பாளரை தோல்வி அடைய செய்துள்ளார்.
No comments:
Post a Comment